ரிசர்வ் வங்கியின் செல்லாத அறிவிப்பு ...

ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய பணத்தையெல்லாம் திரும்பப் பெறப் போகின்றனர். இதனால், ரூபாய் நோட்டுகள் புதியதாக மாறப்போகின்றன.

---
கணக்கில் வராத வருமானம், செலுத்தாமல் ஏமாற்றிய வரி - ஆகியவற்றை கருப்புப் பணம் என்று சொல்வார்கள். பணம் ஒரு ஊடகம் மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள்தான், இந்த வகையில் சொத்துக் குவிக்கும் பண முதலைகள்.

எனவே, அவர்கள் தங்கள் சம்பாத்தியத்தை ரூபாயாக கையில் வைத்திருக்க மாட்டார்கள். அதுவும் 9 ஆண்டுகளாக அந்தப் பணத்தை பணமாகவே வைத்திருப்பது சாத்தியமற்றது.

மாறாக, தடையின்மை வர்த்தகம், அன்னிய முதலீடு, பங்கு வர்த்தகம் ஆகியவற்றின் பெயரால்தான் கருப்புப் பண பரிமாற்றமே நடைபெறுகிறது. மொரீசியஸ் நாட்டோடு போட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தம் அதற்கொரு எடுத்துக்காட்டாகும்.

ஆனால், இதுகுறித்தெல்லாம் எதுவும் பேசாத ரிசர்வ் வங்கி - கருப்புப் பணம் என்பது - கருப்பாக இருக்கும் பணம் என்கிற ரீதியில் செய்துள்ள அறிவிப்பால், வேறெதுவும் மாயாஜாலம் நிகழப்போவதில்லை.

#பணம்

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels