Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

குக்கூ - இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க ...

ஏ பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிடுச்சே ...
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிடுச்சே ...

இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க. அதுவும் ... 'தீ கங்குல பால் சட்டிய போல் பொங்குறனே' னு அந்த பாடகர் பாடப் பாட, எனக்குமே என்னவோ பண்ணுது. தெரியாமலே, கண்ணுல கசியுது. சுதந்திரக் கொடியை நேசிக்கும் தமிழாவே மாறிடலாமானு ஒரு நொடி தோணுது.

ஒரே ஒரு பாட்டுல இதையெல்லாம் செய்ய முடியும்னா - படத்துல என்னெல்லாம் செய்திருப்பார்கள் ராஜுமுருகன் குழுவினர்??.

படத்தோட முன்னோட்டம் பார்த்தேன். 'ஒவ்வொரு பொண்ணும் சாமிடா' - நல்ல மனசு இருக்குறவன்தான் ஆம்பள என தனக்கான இலக்கணங்களை அழுத்தமாகவே பதியவைக்கின்றன வசனங்கள்.

சில படங்கள் அதிக ரசிகர்களைப் பெற்றும் பெருமையடையும். குக்கூ -வை ரசித்து ரசித்து நாம் பெருமையடைவோம் என்று தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=-XpJKfIAFLw

waiting for that moment ...

#குக்கூ

புரிந்துகொள்ள விரும்பாத ரகசிய பக்கங்கள் ...

Priya Thambi - இன் 'எனக்கான முத்தம்' சிறுகதை - வாசிக்கும்போது நெகிழ்வை ஏற்படுத்துகிறது. உள்ளே, உரையாடி புரட்டியே போடுகிறது.

----
ஆண்களுக்கும், பெண்களுக்குமான பல்வேறு உறவு நிலைகளுக்கு பொதுவான இலக்கணங்களில் விளக்கமேதும் கிடையாது. ஒவ்வொரு மனிதனும் பேரிலக்கியமென்றால், அதில் தனக்காக மட்டும் எழுதப்படும் பக்கங்கள்தான் அதிகம். அதிகம் பிறரால் வாசிக்கப்படுவதும் அதே ரகசிய பக்கங்கள்தான்.

ரகசியங்களுக்கு ஆடையணிவிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். அலங்காரம் செய்கிறார்கள். புத்தாடை அணிவித்து உலவவிடுகிறார்கள். ரகசியங்களைப் பேசவும், தெரிந்துகொள்ளவும் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், அவற்றை புரிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை.

அதிலும், ஆண் - பெண் இடையிலான நட்பாராதனைகள், காதலாயணங்களுக்கு முன் எப்போதும், ஒரு எச்சரிக்கை வாசகம் தொங்கிக் கொண்டேயிருக்கும். அந்த வாசகம், ஒரு நாளும் முழுமையான சுயத்தை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதே இல்லை.

'எனக்கான முத்தம்' - மெல்லிய நினைவுக் கோடரியால், நினைவுக் கிளைகளை அசைக்கத் தொடங்கியது.

-------
நாம் ஒரு நாள் இதையெல்லாம் தாண்டி நிற்போம். சக மனிதரை அவர்களின் உண்மையை நேசிக்கத் தொடங்கும் புதிய உலகில், புதிய மனிதர்களின் தரிசனம் அப்போது தொடங்கும்.

Labels