என்ன வகையான அமைதி இது?

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் அவமானப் படுத்தப்பட்டுள்ளது. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. யாரும் கொதிப்படைந்ததாகத் தெரியவில்லை.

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் தலித் கிராமத்தினர் தங்கல் விருப்பப்படி வாக்களித்தனர். எங்கள் ஓட்டு யாருக்கு என தீர்மானிப்பது எங்கள் உரிமை என்று சொல்லிய குற்றத்துக்காக அவர்களின் சொத்துக்கள் சுரையாடப் பட்டுள்ளன. அடித்து நொறுக்கப்பட்ட மக்கள் கதறியபடி தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். தாக்கியவர்கள் சாதி வெறி ஊட்டப்பட்டவர்கள். நிதானித்து சிந்திக்கும் எந்த சாதி மனிதனும், இது மனித குலத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டிய மனநிலை என்று உரக்கப் பேசுவான். மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உடனே அங்கு சென்று சேர்ந்தது ஆறுதல். ஆனால் இந்த சம்பவத்தைக் கண்டு தமிழகம் கொதித்தெழவில்லை. அமைதி நிலவுகிறது.

**

 25 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என நீதிபதி சதாசிவம் அறிவித்தார். உடனே குஜராத்திலிருந்து பிரவீன் தொகாடியா ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டார். முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாட வேண்டும் என அமைந்திருந்த அந்த பேச்சில் 'ராஜிவ் கொலையாளிகளே விடுதலை பெறப் போகிறார்கள்' என்ற வாசகம் இடம்பெற்றது தற்செயல் அல்ல.

மனிதநேயம் பேசி, மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொள்ளும் வைகோ போன்றோர் அந்த இந்துத்துவக் கூச்சலை மெளனமாகவே கடந்து சென்றனர். இப்போது, இந்த சாதி வெறித் தாண்டவம் குறித்தும் கள்ள மெளனம் நிலவுவது - என்னவகையான மனநிலை??

 **

 தமிழுணர்வாளர் என்ற போர்வையில், எத்தகைய அயோக்கியத்தனத்திற்கும் துணை போகிறவர்கள் ஒரு பக்கம் இருக்க. தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதி வெறி தாண்டவமாடுவதும். சுரணையற்றவர்களாக தமிழினம் மாற்றப்படுவதும் அனுமதிக்கக் கூடிய ஒன்றா?? ‪

#‎மனிதனே‬ விழித்தெழு...

 ‪#‎சாதி‬ I ‪#‎வன்முறை‬ I ‪#‎தலித்‬ I Sindhan Ra I ‪#‎Caste‬ I ‪#‎Dalith‬

1 comment:

  1. உன் பெண்ணை கொடு ஒட்டு போடுகிறேன் ,என்ற வசனத்தை மறைத்து இக்கட்டுரை சொல்வதன்மூலம் இவர்களின் சாதி வெறி மறைக்கப்படும் என்று இன்னமும் நம்பிக்கொண்டு எழுதிவருகிறார்கள் .உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது.

    ReplyDelete

Labels