Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts
Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts

காவலர்கள் செய்த பாலியல் சீண்டல் ... :(

திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் 8 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த பிரச்சனையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர். ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டவர்களின் தொடர் போராட்டத்தாலேயே இந்த கைது நடவடிக்கை சாத்தியமானது. ஆனால், குற்றவாளிக்கு எதிராக தகுந்த சாட்சியங்கள் இல்லை என கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இனி, மேல் முறையீடு செய்துதான் நியாயம் பெற முடியும்.

இந்த நிலையில், சில நாட்கள் முன்னர் பனியன் கம்பனியில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த 16 வயது பெண் குழந்தை மீது பாலியல் சீண்டல் செய்தி அதிர்ச்சி கொடுத்தது. அந்தப் பெண் 11 ஆம் வகுப்பு படிக்கிறாள். கம்பனி வாகனத்தில் சக தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்தவர்களை சில 'காவலர்கள்' நிறுத்தியுள்ளனர். தொழிலாளர்களை தள்ளி நிறுத்திவிட்டு, அந்த பெண் குழந்தையின் உடல் பாகங்களை தொட்டு சீண்டியுள்ளனர். இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

யார் சட்டங்களை அமலாக்க வேண்டுமோ அவர்கள் உரிய கவனமெடுப்பதில்லை என்பது மட்டுமல்ல, வேலியின் வேலை - மேய்வதாகவே இருக்கிறது என்பது நாமெல்லாம் தலை குனிய வேண்டிய ஒன்று. "சட்டங்களை மேலும் மேலும் வலுவாக்கி என்ன செய்வது?" நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதையும் இணைத்தல்லவா பார்க்க வேண்டும்??

நேற்று உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் பேசுகிறார். "இளைஞனும், இளம்பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர். நட்பு முறிந்தவுடன், அந்தப் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் கூறுகிறார்." பலாத்காரத்துக்கு விளக்கம் கூறுகிறார்.

பலநூற்றுக்கணக்கான கொடுமையான பலாத்காரங்களும், கொலைகளும் அறங்கேறிய குஜராத் கலவரங்களின் ஆத்ம பலமாக இருந்தவர் - தானே அடுத்த பிரதமர் என வலம் வருகிறார். இன்றைய தேர்தல் களத்தில் காங்கிரசும், பாஜகவும் அதிகமான கிரிமினல் பின்புலமுள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
--

ஒன்று தெளிவாகிறது...

சமூகத்தை வெற்றுப் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு, நேரம் வந்தால் வாக்களிப்பதன் மூலம் மட்டும் மாற்றிவிட முடியாது.

Labels