தனித் தமிழ்நாடு என்பதொரு மோசடி முழக்கம் !

தமிழ்நாட்டுக்கு மட்டும் விடுதலை வேண்டும் என்று சில நண்பர்கள் பதிந்திருக்கிறார்கள். இந்த முழக்கம் விவேகமானதென்று எனக்குத் தோன்றவில்லை.

தமிழனுக்கு அன்னியமாய் அரசாங்கம் செயல்படுகின்ற காரணத்தால் - இந்த முடிவுக்கு வந்திருப்பதாய்ச் சொல்கிறார்கள். யார் இந்த அரசாங்கம் என்ற கேள்வியை போகிறபோக்கில் விட்டுவிட்டால் - செக்குமாடு கணக்காக - ஆமாம் ஆமாம் என்று ஆதரித்துச் சென்றுவிடலாம்.

இந்தியா என்ற கருதுகோள் - நான் மன்மோகனுக்கு ஓட்டுப் போட்டுவிட்டேன் என்பதானால் ஏற்பட்டதல்ல. சுதந்திர இந்தியாவில் - எந்தவொரு அரசாங்கமும் 50% வாக்குகளைப் பெற்று அமைந்ததில்லை என்கிறதால் இது எக்காலத்திலும் உண்மையில்லை. - வேலூர் புரட்சி தொடங்கி - கப்பல்படை எழுச்சி வரைக்கும் செங்குருதி நிலத்தில் வீழ - விடுதலையைப் பயிரிட்ட வீரர்களின் உயிர் கொண்டு எழுதப்பட்டது - இந்திய சுயாட்சி.

உள்நாட்டுக்குள்ளே அன்னியனைத் தேடி அலையச் சொல்கிறது அந்த முழக்கம். அன்னியர்களையெல்லாம் ஒதுக்குவதென்று முடிவெடுத்துவிட்டால் - என் வீட்டில் எனக்கே எனக்கென்று ஒரு அரை ஒதுக்கி அதற்குள் பதுங்கிக் கொண்டு - இணையத்தில் ஸ்டேடஸ் போட்டால் கூட 100 பேர் ஆதரிக்கிறார். ஒறாயிரம் பேர் எதிர்க்கிறார்.

சுயாட்சியையும், சொந்த மக்களின் உரிமைகளையும் காவுகொடுத்தும் ஒரு அரசாங்கம் நடக்கிறதென்றால் - தீயிட்டுக் கொழுத்த தீப்பந்தம் எடுக்க முடியாதவன் - புறமுதுகிட்டு ஓடுகிற கணக்காய் இருக்கிறது தனித் தமிழ்நாட்டுக்கான முழக்கம்.

உள் வீட்டின் முற்றத்தில் குப்பையாய்க் கொட்டிக் கிடக்கிறது.

ஓராயிரம் ஆறுகள் செத்துக் கிடக்கின்றன. தாய் முலையருத்து பால் குடிக்கும் கேவலமாய் மணல் கொள்ளை நடக்கிறது. கல்வி கடைச் சரக்காய் - அப்பனெல்லாம் கடங்காரனாய் செத்து செத்துப் பிழைக்கிறான். பெண்ணுடலைக் கூவி விற்கும் சினிமா பல் இளிக்கிறது. மதுக்கடைகள், பிணக் குவியலுக்கு வழி காட்டியபடி நிற்கின்றன. ஒவ்வொரு கிராமங்களும் சாதியத்தின் கோடாரியில் இதயம் பிளந்து கிடக்கின்றன. சேரியெல்லாம் சீழ்ப் பிடித்துக் நாற்றமெடுக்கிறது மனிதம்.

சொந்த வீட்டை கூட்டித் துடைக்க சீமாறு பிடிக்கத் தெரியாதவன் - சட்டையைப் பிடித்து உலுக்குகிறது வினோதியின் பிணம்.

#ஆள்கிறவனுக்கோ - இருக்கிற உரிமைக்கான முழக்கத்தையெல்லாம் விட்டுவிட்டு - மிச்சமுள்ள மக்களையெல்லாம் மிரட்டி பணியவைக்க ஒரு 'பயங்கரவாதி' கிடைத்துவிட்டான் என்று நாவில் எச்சில் வழிகிறது

11 comments:

 1. sariyaana padhivu.... ilangai thamizhargalukku aadharavu kodukkavillai indhiya arasangam.. adhanaal engalukku thani thamizhagam vendum endru kooruvathu arivatra karuththu enbathu en karuththu...

  http://nisu1720.blogspot.com/2013/03/blog-post_7150.html

  ReplyDelete
 2. ஒரு ஆண்டிற்கு நாற்பதாயிரம் கோடி ரூபாயை குடித்தே அழிக்கும் தமிழனுக்கு எந்த விடிவும் ஏற்படாது

  ReplyDelete
 3. தமிழக விடுதலை மிக அவசியம்,. ஆனால் அதற்கு நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

  ReplyDelete
 4. மக்களுக்கு விடுதலை அவசியம். தமிழகம் என்ற நிலப்பரப்பிற்கல்ல

  ReplyDelete
 5. அய்யா, ஒவ்வொரு முறையும் இந்திய அரசிடம் கேட்டு கேட்டு அலுத்துப் போனது.
  கடந்த ஒரு வாரமாக தமிழக எம்.பிக்கள் போடும் கூச்சலை கவனியுங்கள்.
  ஆனால் அந்தக் குரலைக் கேட்பாரில்லை.
  அதனால் தமிழ்த்தேசியம் அவசியம்.

  அதற்கு முன்னர்
  சாதி, மதம் போன்ற பிரிவினைகள் அகற்றப்பட வேண்டும்.
  ஊர், சேரி பாகுபாடு உடைத்தெறியப் பட வேண்டும்.
  பெண்ணடிமை நீக்கப்பட வேண்டும்.
  மனிதநேயம், மானுடம் வளர்க்கப்பட வேண்டும்.
  தனிமனித ஒழுக்கம் வளர்க்கப்பட வேண்டும்.
  இதுபோன்று இன்னும் பல காரியங்கள் செய்தபின்னர் "தமிழ்த்தேசியம்" என்னும் உரிமையை பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு பல காலங்கள் தேவைப்படும்.

  இது எதுவும் செய்யாமல் சும்மா 'தனித் தமிழ்நாடு' கோஷம் போட்டால் அது ஏமாற்று வேலையே!

  ReplyDelete
 6. உண்மையாகச் சொல்கிறேன் தோழர். நானும் 2011 வரை உங்கள் கருத்தில்தான் இருந்தேன்.
  அதன்பின்னர் தமிழ்சமூகம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைத்தது.

  ReplyDelete
 7. ஒரு வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் ( 26 தமிழர்கள்) தூக்கு தண்டனை விதித்து தன் ஆதிக்கத்தை இந்திய ஏகாதிபத்தியம் நிலைநாட்டியது ரணக்கொடூரம். அதில் 19 பேர் அடுத்த ஒரு வருடத்தில் விடுவிக்கப்பட்டார்கள். ஒருவேளை அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால்....நினைக்கவே பயமாக இருக்கிறது

  இதுபோன்று இந்திய ஆதிக்கத்தின் அழிச்சாட்டியங்கள பலவற்றைக் கூறலாம்.

  ReplyDelete
 8. குருநாதர்,
  அப்ப விடுதலைபுலிகள் 26 பேர் என்ன தவறு செய்தாலும் கோர்டு அரசாங்கள் எல்லாம் அவர்கள் காலில் விழுந்து போய்ட்டு வாங்க என்று சொல்ல வேண்டுமா
  என்ன கூமூட்டை தனமாக இருக்கு

  ReplyDelete
 9. @james please read it first

  www.lankawin.com/view.php?2aIWnJe0dFj0K0ecQG7D3b4F9EY4d2g2h2cc2DpY2d436QV3b02ZLu3e

  ReplyDelete
 10. ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சி.பி.ஐ. அதிகாரியான ஸ்ரீகுமார் என்பவர் இலண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் இந்த வழக்குத் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டதாக அந்த விமான நிலைய காவல்நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். முக்கியக்கோப்புகளைத் தொலைத்த அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளை திரும்பப்பெற ஏன் மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை? இந்தக்கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

  for more http://www.tamilkathir.com/news/10235/58//d,full_art.aspx

  ReplyDelete
 11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவிவிடாமல் தடுக்கும் கருவியாக ராஜீவ் கொலை வழக்கை தில்லி பயன்படுத்தியது. அதனால்தான் இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டு தமிழர் 13 பேர் ஈழத் தமிழர்கள். சரிசமமான எண்ணிக்கை என்பது தற்செயலானது அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைப்பதற்காக இந்தச் சதி வகுக்கப்பட்டது. இந்த உள்நோக்கத்துடனே சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு தனது புலன்விசாரணையை நடத்தியது.

  ReplyDelete

Labels