தை?
சித்திரை? அல்லது ஜனவரி? - என சர்ச்சை எழுப்புவோர் ஒன்றை
மறந்துவிடுகிறார்கள். மக்கள் எல்லா பிரசங்கங்களையும் கேட்டுக்கொள்வார்கள்.
ஆனால் கொண்டாட்டங்களை அவர்கள் விடுவதேயில்லை.
கொண்டாட்டங்கள் - உலக இயல்பு. குழந்தை பிறப்பா, சாவுச் சடங்கா, திருமணமா? அட ஒன்றுமேயில்லையானால் நீ காதலிக்கிறாயா? காதலில் வெற்றியா? தோல்வியா? - எதேனும் ஒரு பதில் சொல் - சிரித்துக் கொண்டோ, அழுதுகொண்டோ கொண்டாடலாம்.
கொண்டாட்டங்களில் இருந்து பிரிக்கமுடியாத மனிதர்களை நான் தெருவெங்கும் பார்க்கிறேன். விழிம்பு நிலையில், தன் வாழ்க்கையைத் தொலைத்து தெருவெங்கும் எதிர்காலத்தின் அவநம்பிக்கையாக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்களிடம் கூட கொண்டாட்டங்களுக்கு இடமிருக்கிறது.
சிலருக்கு சோறு, சிலருக்கு மதுபானம், சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு காதல், சிலறுக்கு உறவின் கூட்டம் - ஏதேனுமொருவிதத்தில் தன்னைப் மறுவுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கிறது மனித இனம்.
சிரிப்பதிலும், ஒன்றுகூடலிலும் மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் தனிமையும், ஒதுக்குதலும் நம்மை வாட்டுகிறது. உயிர்ப்பின் உன்னதம் காரணமாகத்தான், மரணம் அச்சமுட்டுகிறது.
அன்பர்களே, பெருங்கூட்டமாக சேர்ந்துகொள்ளுங்கள், எல்லாக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் - மொத்தத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடட்டும். ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமே நமது இலக்கு.
be happy, make everyone happy ...