Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

மான் கராத்தே - கல் நீக்கி கடிக்க !

"10 திருக்குறள் கூட மனப்பாடம் செய்ய முடியாதவர்களால் - காதலிக்கப்படும் பெண்களுக்கான ஒரே தகுதி 'வெள்ளையாய் இருப்பது'.பெண்ணைப் பெற்ற தமிழ் வாத்தியார்கள் அரை முட்டாள்கள்."

"வாழ்க்கையில் வெற்றியடைய எந்த திறமையும் தேவையில்லை. மக்களை குஷிப்படுத்த ஒரே வழி - ஓபன் தி டாஸ்மாக் ..." 'மான் கரேத்தே' திரைப்படத்தின் வழியாக எதையாவது நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இப்படித்தான் ஆகும்.

சினிமாவில் எப்போதும் யதார்த்தமான கதைகளைத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை, ஆனால்  ஒரு கதைக்கு வியாபாரத்தைத் தாண்டி சில நோக்கங்கள் இருக்க வேண்டும்.

'IT' ஊழியர்களெல்லாம் நிறைய சம்பாதித்து - கூத்தும் கும்மாளமுமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது நமது பொதுப்புத்தி. ஆனால், எத்தனையோ உமாமகேஸ்வரிகளும் 'ஐடி' தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அப்பாவை, குடும்பத்தை, குழந்தையைப் பிரிந்து - வாழ்க்கைப் பாட்டுக்காக கசக்கிப் பிழியப்படுகிறார்கள் - என்ற உண்மை நமக்கு எப்போதாவதுதான் தெரிகிறது.

காதலைத் தாண்டி - காதலில் நிறைய இருக்கிறது. பொருளற்ற உரையாடல்களுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது. உங்கள் பெரிய மூக்கோ, அகண்ட கன்னங்களோ, அசிங்கமான மூக்கோ இன்னொருவரால் எள்ளப்படும்போது - வாய்விட்டுச் சிரிப்பது மனிதத் தன்மையற்ற கேவலம். இதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், ஒரு படைப்பாளனுக்கு அக்கறையில்லை.

நாம் வாழ்க்கையை சற்றும் பிரதிபளிக்காத, தகுதியற்ற படங்களை - கல் நீக்கி, கடித்துச் சாப்பிட பழகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதீத சகிப்புத் தன்மை - தமிழனின் பொது குணமாகிவருகிறது. விஜயகாந்த்துகள் அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழகத்தில் மான் கராத்தேவுக்கு மார்க்கெட் இருப்பது அதிசயமில்லை.

தெகிடி - தொடங்கிவைக்கும் சில தேடல்கள் !

'ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களை திரட்டி என்ன செய்துவிட முடியும்??' ... 'எந்தக் குற்றமும் செய்யாத போது உங்களுக்கு ஏன் அச்சம்?' அரசாங்கங்கள் ஒவ்வொரு குடிமகனின் தகவல்களையும் எந்த கட்டுப்பாடுமில்லாமல் திரட்டுவது குறித்த தகவலை எழுதியபோது வந்த கேள்விகள் இவை.

அமெரிக்கா, பிரிட்டன் வரிசையில் இந்தியாவும் உலகம் முழுவதுமுள்ள/தங்கள் சொந்த குடிமக்களதும் தனிநபர் தகவல்களை திரட்டுகின்றன. தொலைபேசி உரையாடல்கள், சேட்டிங் தகவல்கள், இ-மெயில்கள் என எல்லாமும் சேகரமாகின்றன. (இவை அரசுகளின் கைக்கு மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்களின் கைகளுக்கும் செல்கின்றன)

இப்படிப்பட்ட தகவல்களை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காட்டிக் கொடுக்கிறது 'தெகிடி'. படத்தின் நாயகன் ஒரு துப்பறியும் நிபுணர். அவர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார் என்பதுதான் கதை.
----
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகவும் படம் பேசுகிறது.

ஆனால், ஏதோ சில தனி நபர்கள் அல்ல - நிறுவனங்களே தங்கள் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள். குரூப் இன்சூரன்ஸ் பலன்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் 'சிக்கோ' என்ற ஆவணப்படம் இன்னும் தெளிவாகக் காட்டும். 

'தெகிடி' ஒரு சுவாரிசியமான கதைப் போக்கில், இப்படியான நல்ல தகவல்களை அறிந்துகொள்ளும் முயற்சியை தொடங்கி வைக்கிறது.

‪#‎A_feel_good_movie‬ ...

குக்கூ - இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க ...

ஏ பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிடுச்சே ...
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு துள்ளிக் குதிச்சிடுச்சே ...

இசைய கேட்டா மனசு குதிக்குதுங்க. அதுவும் ... 'தீ கங்குல பால் சட்டிய போல் பொங்குறனே' னு அந்த பாடகர் பாடப் பாட, எனக்குமே என்னவோ பண்ணுது. தெரியாமலே, கண்ணுல கசியுது. சுதந்திரக் கொடியை நேசிக்கும் தமிழாவே மாறிடலாமானு ஒரு நொடி தோணுது.

ஒரே ஒரு பாட்டுல இதையெல்லாம் செய்ய முடியும்னா - படத்துல என்னெல்லாம் செய்திருப்பார்கள் ராஜுமுருகன் குழுவினர்??.

படத்தோட முன்னோட்டம் பார்த்தேன். 'ஒவ்வொரு பொண்ணும் சாமிடா' - நல்ல மனசு இருக்குறவன்தான் ஆம்பள என தனக்கான இலக்கணங்களை அழுத்தமாகவே பதியவைக்கின்றன வசனங்கள்.

சில படங்கள் அதிக ரசிகர்களைப் பெற்றும் பெருமையடையும். குக்கூ -வை ரசித்து ரசித்து நாம் பெருமையடைவோம் என்று தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=-XpJKfIAFLw

waiting for that moment ...

#குக்கூ

பாலுமகேந்திரா காலமானார் ...

தமிழ்த் திரையுலகின் முற்போக்கான ஏராளமான படைப்பாளர்களுக்கு ஊக்கப் புள்ளியாக இருந்தவர் பாலுமகேந்திரா. அவர் காலமாகிய செய்தி, சற்று முன் வந்தது.

அவர் குறித்து Syamalam Kashyapan பகிர்ந்திருந்த ஒரு செய்தியை இங்கே நினைவூட்டலாம்.

"பாலு சார்! ஜப்பானிய திரைப்படம் ,பிரன்சு திரைப்படம், ஜெர்மனிய திரைப்படம் என்று இருக்கிறது. அவை அந்த நாடுகளின் கலாச்சார பண்பாடுகளை சித்தரிக்கின்றன. " இந்திய சினிமா" என்று இருக்கிறதா?

மென்மையாகப் பேசுபவர் அவர். கைப்பிடிச்சுவரிலிருந்து இறங்கி என் அருகில் வந்து என் தோளில் கைபோட்டு குலுக்கினார். என்னிடமிருந்து விலகி என் கண்களைப்பார்த்து "தமிழ் சினிமா இருக்கிறது.மலையாள சினிமா இருக்கிறது வங்காள .கன்னட மாராத்தி படங்கள் ,ஏன் இந்தி சினிமாவும் உள்ளது. இந்திய சினிமாவை நம் தான் உருவாக்க வேண்டும். " என்றார்.

அவர் காட்டிய பாதையில், இளவல்கள் வென்றுகாட்டுவார்கள். அதுவே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

‪#‎அஞ்சலி‬ ‪#‎RIPBaluMahendra‬

வீரம் - மூன்று செய்திகள் ...

திரைப்படங்களை வணிக திரைப்படம், கலைத் திரைப்படம் என்று பிரிப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ரசிகனாக தன்னிடம் வரும் மனிதனுக்கு, திரைப்படம் எதைக் கொடுக்கிறது? என்பதுதான் மையமான கேள்வி. அந்த வகையில் 'வீரத்தை' மூன்று காரணங்களுக்காக கொண்டாடலாம்.

'நான் உழைக்கிற சாதிடா' - படத்திற்கு இந்த வசனம் தேவையா? என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய சூழலில் சுரண்டுபவனை எதிர்க்க, நீ உழைக்கும் சாதியாய் இருந்தால் போதுமென்கிறது வீரம்.

படத்தின் வில்லங்களை இன்ன சாதி, இன்ன மதம் என்று அடையாளப்படுத்துவதிலிருந்து மாறுபட்டு - கந்துவட்டிக் கும்பலையும், பட்டாசு ஆலைகளின் ஒட்டச் சுரண்டும் கூட்டத்தையும் நிறுத்தியிருப்பது - சமகாலத்தின் தேவை.

இறுதியாக - நாம் என்னதான் நியாயத்தின் பக்கம் நின்றாலும், நம்மால் தனது சொகுசு வாழ்க்கையை இழக்க நேறும் வெறியர்களும்/ எதிர்வர்க்கமும் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் உழைக்கிறவனை உரசி, வன்முறைக்குத் தூண்டுவார்கள் ... ஆனால், இறுதியில் உழைக்கிறவன் வெல்வான்.

இந்த இடத்தில் உழைக்கும் சாதியின் பிரதிநிதியாக, அஜித் நிற்கிறார். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் நின்ற்க வேண்டும்.

# kudos man ... fight united :)

மருத்துவ பில்லுக்காக ஜாக்கிசானை விற்க முயன்ற அப்பா ! : ஜாக்கிசான் பேட்டி

என் அப்பா என்னை பிறந்ததும் விற்க ஒப்புக் கொண்டார் ...

”என் அப்பா ஒரு தைய்வான் உளவாளி. ஹாங்காங்கில் ஒளிந்துகொண்டு சைனாவுக்கு எதிராக செயல்பட்டார். அவருக்கு 2 மகன்கள் இருந்தார். என் அம்மாவுக்கு 2 மகள்கள் இருந்தார்கள்.


அவர்கள் இருவருக்கும் பிறந்த முதல் மகன் நான். நான் மிகவும் குண்டாக இருந்தேன். அதனால் என் அம்மாவுக்கு ஆபரேசன் செய்ய நேர்ந்தது. அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனை பில் செலுத்த முடியவில்லை. மிக ஏழ்மையான அப்பாவிடம் சென்று 500 ரூபாய் தருகிறேன் . அந்த குழந்தையை கொடுத்துவிடு என்று சொன்னதும் அப்பா எடுத்துக்கொள்ளுன்கள் என்று சொல்லிவிட்டார்.”

”அப்போது அவரது நண்பர்கள் வந்து என் அப்பாவிடம் - உனக்கு இப்போது 40 வயதாகிவிட்டது. என்று சொல்லி, அவர்கள் பணத்தை சேகரித்து கொடுத்து  மருத்துவ பில்லை கட்டினார்கள்”

முழுமையான பேட்டி - மாற்று

முடக்கப்பட்ட முதல் சினிமாவில், கண் தெரியாத பாடகியின் இசை ...

இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சினிமா, முடக்கப்பட்ட கதையைச் சொல்லும் ”செல்லுலாய்ட் டிரீம்ஸ்” திரைப்பட அறிமுகத்தை மாற்று-வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தமிழில் அந்தப்படம், ஜே.சி.டேனியல் என்ற பெயரில் வருகிறது.

இந்தப் படத்தில் வெளியாகவுள்ள பாடலை அறிமுகம் செய்த எனது பதிவு மாற்றுவில் வெளியாகியுள்ளது - இசையைப் பார்க்க முடிந்தவர் ’வைக்கம் விஜயலட்சுமி’ 

நேரம் - வெற்றிபெற்றது நல்ல நேரமா?

நேரம் – படம் பார்த்ததை அதன் வழியிலேயே விளக்கினால் …

மிகத் தாமதமாகச் சென்றதால் - தியேட்டர் வாசலில் ‘குட்டி புலி’ போஸ்டர் ஒட்டியிருந்தது கெட்ட நேரம் ... குட்டி புலி காலையில்தான் ரிலீஸ் என்பதால் இரவுக் காட்சி பார்க்க முடிந்தது நல்ல நேரம் ... 

நேரத்தில் 2 வகை - ஒன்று நல்ல நேரம், மற்றொன்று கெட்ட நேரம் என்பதாக தொடங்கும் அந்தப் படம் - பொருளாதார நெருக்கடி கூட கெட்ட நேரம் என்று விளக்குவது - மக்களை நேரம் குறித்த மூடநம்பிக்கையில் எந்த அளவுக்கு ஏமாறுகிறது என்பதைக் காட்டுகிறது. – போகிற போக்கில் அந்த வாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாக அமைந்துவிடுவது இந்தப் படத்தின் பெரும் குறையே …

நல்ல நேரம், கெட்ட நேரம் போன்ற கற்பிதங்களை சாமானியர்கள் ஒரு இடைக்கால நிவாரணமாகக் கொள்கின்றனர். ஆனால், இந்த பொய்மைக் கருத்துகளே பின்னர் ஜாதகம், ஜோதிடம் – மந்திரத் தகடு, தனலட்சுமி யந்திரம், ராசிக்கல் மோதிரம் என மோசடி வியாபாரங்களுக்கு துணையாகிவிடுகின்றன.

’நேரம் – அந்த அளவுக்கு மூட நம்பிக்கைக்கு துதிபாடவில்லை என்பது ஆறுதல்.

’நேரம்’ சில யதார்த்தங்களை – மனதில் தைக்குபடி பதித்துவிட்டுச் செல்கிறது.
பிரச்சனைகளை – ஆணும், பெண்ணும் அணுகும் விதங்கள். நட்பின் யதார்த்தம். கந்துவட்டியின் பிடியில் மாட்டிக்கொள்ளும் நபர்களின் மன உணர்வுகள் என அத்தனையையும் நம் உணர்வுகளில் வடித்தெடுக்கிறது.

இயல்பான காதல், பதபதைப்பு, துன்பம், நகைச்சுவை என புதிய இயக்குநர்கள் – வாழ்க்கையின் சாரத்திலிருந்து கதைகளை எடுக்கிறார்கள். கதைகளே சூப்பர் ஸ்டாராக வளர்ந்துவரும் இந்த வளர்ச்சி தலையில் வைத்து கொண்டாடத் தகுந்ததாக இருக்கிறது.
கேமராவின் கண்களில் – சுமாரான மனிதர்கள் கூட அத்தனை அழகாய்த் தெரிகிறார்கள். எடிட்டிங், பின்னணி இசை என ஒவ்வொன்றும் படத்துக்கு பலம்.

நேரம் குழுவினருக்கு வாழ்த்துகள் … # உங்கள் வெற்றிக்கு நேர்த்தியான உழைப்பே காரணம். நேரம் நல்லா இருந்ததால் நீங்கள் இப்படியொரு வெற்றியை சுவைத்திருக்கவில்லை.

அப்பாவும் - தங்க மீன்களும் ! (ஒரு உரையாடல்)

அப்பாக்களைக் குறித்து நாம் போதுமான அளவு பேசுவதில்லை ... அதனால்தான், ஓரளவு சுமாராகப் பேசினால் கூட - நெகிழ்ந்துபோகிறது மனது ...

'தங்க மீன்கள்' திரைப்படை முன்னோட்டத்தை ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். தன் மகளின்/மகனின் சின்னச் சின்ன ஆசைகளையே, தன் வாழ்நாள் லட்சியமாய்ச் சுமந்துகொண்டு - தன் இயலாமைக்கு கோபத் திரையிட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாக்கள் - வாழும்போது கவனிக்கப்படுவதேயில்லை.



அப்பாக்களாய் இருத்தலும் ஒரு சக்கரம்தான். பிறந்து சில நாட்களுக்கு குழந்தையின் யாசகர்கள். பின் சில வருடங்கள் குழந்தைக்கு நாயகர்கள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது மாணவர்கள்.

சமீபத்தில் பாண்டியராஜ் இயக்கிய கேடி பில்லா - கில்லாடி ரங்கா பார்த்தேன். இறுதி சில காட்சிகள் கண்களை நிரப்பின. அது படத்தின் வெற்றியென்று தோன்றவில்லை
. சொல்லப்போனால், மிகச் சிறிய அளவே அப்பாக்களை நேர்மையாக பதிவு செய்திருந்த போதிலும், அந்தப் படம் மனதை வருடியது - அப்பாக்களால்தானேயன்றி - படத்தால் அப்பாக்கள் பெருமையடைந்ததில்லை.

முன்னொரு முறை தவமாய்த் தவமிருந்து அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது - இன்னும் எண்ண முடிந்த சில படங்களில் அப்பாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நாவல்கள், சில கவிதைகள் - எழுதப்பட்டிருக்கின்றன.

அவர்களை புனிதப்படுத்தி உயர்ந்த ஜீவன்களாய்க் காட்டுவதும் சரி - நேசிக்கவே தெரியாத காட்டு மனிதர்களாய்க் காட்டுவதும் சரி அவர்களுக்குச் செய்யும் துரோகமென்றே படுகிறது. மேலும், உன் மகன் உன்னை மதிக்கவேண்டுமானால், நீ அப்பாவை மதி என்ற மிரட்டல் தொனியிலான அறிவுருத்தல்களும் அப்பாக்களை உணர்த்துவதில்லை.


சாதாரண ஜீவன்களாய்ப் பிறந்து - தனக்கும் ஒரு தொடர்ச்சி உண்டென்றுணர்த்தும் குழந்தையைக் கண்ட பரவச நிலை ஒருத்தனை அப்பாவாக்குகிறது. எல்லா அப்பாக்களும் மதிக்கப்படுவதில்லை. பிள்ளைக்கும் தனக்குமான இடைவெளியை - நட்பால் நிரப்பிக்கொள்ள விரும்பி – வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்ற அப்பாக்கள் கொண்டாடப் படுகிறார்கள். மனதுக்குள்ளேயே புழுங்கி வாழும் ஒருதலைக் காதலனைப் போன்ற அப்பாக்கள் … புதை மேட்டிலிருந்தபடி காதலைச் சுரந்துகொண்டேயிருக்கிறார்கள்.

#அப்பாவென்றொரு கவிதை...


முகநூலில் இந்தப் பதிவில் விவாதிக்க ...

Labels