தொப்பையில் இரண்டு விதங்கள் உண்டு... 1) தொள தொளவென தொங்கும் தொப்பை. 2) வெந்தயம் போட்ட இட்டிலி போல கடினமான தொப்பை.
முதல் வகை தொப்பைகள் மறைக்க ஏதுவானவை. சற்று பெரிய சட்டை, பேண்ட் பட்டனை போடாமல் விட்டு சமாளித்துவிடலாம். இரண்டாவது வகையை மறைத்து வைப்பது கடினம்.
தொப்பைகள் உறுவாக காரணம் பல சொல்கிறார்கள். அதிகமாக சாப்பிட்டு, அலுங்காம வேலை செய்வதுதான் அதில் அடிப்படை. ஆனால், என்ன விதமான உணவு, தொப்பையில் இரண்டு வகைகளை தோற்றுவிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பது தொப்பை உருவாக காரணமல்ல என்றாலும், இன்றைய சமூகத்தில் தொப்பை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக இணைய சமூகத்தில் ஒருமித்த பிரச்சனையே இதுதான்.
சாப்பாட்டை குறைக்காமலே, உழைக்காமலே எப்படி தொப்பை குறைப்பது, வீட்டை விட்டு வெளியே தலை காட்டாமலே எப்படி உடற்பயிற்சி செய்வது - ஒரே சைக்கிளில் 9 வித எக்சைஸ்கள் - என ஏகப்பட்ட டெலி மார்க்கெட்டிங் விளம்பரங்கள் வந்துகொண்டிருப்பது அதன் வெளிப்பாடுதான்.
இந்த சமூகத்தை மாற்றுவதென்றால் - அதன் போக்கிலேயே பொழுதுபோக்கிக் கொண்டிருப்பதில் ஒரு நன்மையும் இல்லை.
”முடியை வெட்டாமலே எப்படி மொட்டை போடுவது?” என்பது போன்ற ஆராய்ச்சிகள் அதிகரிக்க காரணமாக உள்ள இந்த சமூக சிக்கலை - உழைப்பு மட்டும்தான் தீர்க்கும். கம்ப்யூட்டர் முன்னாடி கடினமா உழைப்பவர்கள் உடல் உழைப்பு குறைந்து வருகிறதென்பது யதார்த்தம்.
வீட்டுல தண்ணி வந்தா பிடிச்சு ஊத்துங்க, துணி தொவைப்பது போன்ற கடினமான வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்க... அப்பா, அம்மாவோட காலையில கொஞ்சம் காலார நடங்க ... சமூகத்துல உள்ள மனுசங்களோட பழகுங்க ... சமூகம் மாறணும், நாம மாறணும்.
தொப்பியைப் பத்திநல்லா சொல்லி இருக்கீங்க . தொப்பையை வச்சு நல்லா வியாபாரம் நடக்குது. அதனால் தொப்பை கொறைஞ்சதா தெரியல
ReplyDeleteஎதுக்கெடுத்தாலும் வண்டிய பயன்படுத்தாம கொஞ்சம் நடக்கவும் செஞ்சா தொப்பை குறையும்.
தொப்பை புராணம் அருமை. உடற்பயிற்சி மிகவும் அவசியம், அதை உணர்த்திய உங்கள் பதிவிற்கு நன்றி.
ReplyDeleteதொப்பியைப் பற்றிய ஒரு புதுக்கவிதை (எழுதியவர் யாரென்று தெரியவில்லை)
ReplyDeleteகால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி பாதம் தொட,
சாக்சும், ஷூ லேசும் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!
ரேஷன் கடை க்யூவானாலும்
சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!
மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!.