ரஞ்சிதா - சந்நியாசியாவது குறித்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்??

சந்நியாசி நிலை குறித்து அவர்கள்தான் சில இலக்கணங்கள் வகுத்தார்கள், மனித இயல்பைத் தாண்டிய விதிகளை வைத்து, அவற்றை ஒருவன் பின்பற்றி, தெய்வ சக்தியை எய்துவதாகச் சொன்னார்கள். தெய்வ பக்தி இல்லாதவர்கள்தான் 'ஒழுக்கமற்றவர்கள்' என்று ஏசினார்கள்.

அப்போதெல்லாம் நாம் தெளிவாகச் சொன்னோம், சாமானிய மக்களின் வாழ்க்கை விடியல் குறித்து சிந்திப்பதை விட உயர்ந்த ஆன்மீகமில்லை என்று. ஏழைகளோடு சேர்ந்து உழைத்து, அவர்களின் விழிப்புக்காக நம்மை அர்ப்பணம் செய்துகொள்வதை விட உயர்ந்த 'யோகமில்லை' என்றே சொன்னோம்.

சொர்க லோகத்தில் 'ரம்பையும், ஊர்வசியும்' நடன மங்கையராக இருப்பார்கள் என்று மதங்கள் சொல்லின. சோமபானமும், சுராபானமும் நொருங்கக் கிடைக்குமென அவர்களே எழுதிவைத்தார்கள்.

சக மனிதனை சமமாக நேசிக்கும் சமூகமே சொர்கம் - அதுவே எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும் மாமருந்தென்று சொன்னோம். அறியாமையெனும் போதை தெளிய, எல்லோரும் மனிதராக வேண்டுமென நாம் இலக்கு நிர்ணயித்தோம்.

நித்யானந்தா இன்றுவரை மரியாதைக்குறியவராக, மடாதிபதியாகத் தொடர்கிறார். தன் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, மடத்திலுள்ள பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியதை நாம் கண்டித்தோம், கண்டிக்கிறோம்.

மற்றபடி ஏமாற்றுக்காரர்களும், கொலைகாரர்களும் சந்நியாசிகளாக சுகபோகம் அனுபவிக்கும் நிகழ்காலத்தில் ரஞ்சிதா சந்நியாசியாகியிருப்பது நமக்கு வருத்தமளிக்கும் நிகழ்வல்ல.

தனிப்பட்ட முறையில் - ஒரு நடிகையாகவும், சாமியார் அடியாராகவும் ஒரு பாலியல் பண்டமாக மட்டும் பார்க்கப்பட்டு வந்த ரஞ்சிதாவுக்கு இது ஒரு வெற்றி. இனி அவர் சிலராலேனும் சந்நியாசியாகக் கருதப்படுவார். அம்மாவென்றழைக்கப்படுவார்.

#வாழ்த்துவோம்!

3 comments:

  1. \\நித்யானந்தா இன்றுவரை மரியாதைக்குறியவராக, மடாதிபதியாகத் தொடர்கிறார். தன் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, மடத்திலுள்ள பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியதை நாம் கண்டித்தோம், கண்டிக்கிறோம். \\இது சம்பந்தப் பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவரால் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்றால், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப் பட வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒரு மனிதர் சட்டப் படி குற்றம் புரிந்தவரா இல்லையா என்று தீர்மானித்து நீதி வழங்க வேண்டியது நீதி மன்றம் மட்டுமே. அதற்க்கு முன்னரே, மடத்திலுள்ள பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டினார் என நீங்களாகவே தொலைக் காட்சியில் காட்டப்பட்ட காணொளியை வைத்துத் தீர்மானிக்கக் கூடாது!!

    ReplyDelete
  2. தீர்ப்புகள் வாங்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் ,சில தனி மனிதர்களை நீதிமன்றமே குற்றவாளி இல்லைன்னு சொன்னாலும் அவர்களை நம்ப முடியவில்லை !

    ReplyDelete
  3. what happenend in kanchi madathtipathi case????

    ReplyDelete

Labels