தாலி குறித்து மனுஷ்யபுத்திரனும் - உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களும் ...

தாலி குறித்து Manushya Puthiran தெரிவித்துள்ள கருத்தை - மதத்தோடு தொடர்புபடுத்தி, அவரை இழிவுபடுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

தீர விசாரிக்காமல் எழுந்துள்ள இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருவது என்னுடைய வேலை இல்லை. எனினும், ஒரு கருத்து எந்த சூழலில், என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது என்பதை பார்ப்பதுதான் முக்கியமே அன்றி. சொன்னவரின் மதம் என்ன, சாதி என்ன என்று ஆராய்வது அறிவுடைமை அல்ல என்பதை அழுத்தமாக பதிய விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரன் ஒரு கேள்வி பதில் பகுதியில் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். 

கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?

தாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலி ஒரு பெண்ணுக்கு மிக அவசியமான அடையாளம் என முன் நிறுத்துகிறது.

பிற மதங்களைப் போல - இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமாக அணியப்படும் தாலி வெறும் மணமானதைக் குறிக்கும் அடையாளமல்ல. மாறாக, அது கணவனை சார்ந்து அடிமைச் சேவகம் செய்வதை - நியாயப்படுத்தும் அடையாளமாகும்.

எனவேதான் தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள், தமிழர்கள் தலையில் வைத்து போற்றத்தகுந்த சீர்த்திருத்தவாதிகள் - தாலியை வெறுத்தொதுக்கச் சொன்னார்கள். - தாலியை பலவந்தமாக அகற்றவேண்டியதில்லை. ஆனால், அது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உட்பொருளை பகுத்தறிவால் ஆராய ஒரு பெண் தொடங்கும்போது, அதனை கழற்றி எரியவும் அந்தப் பெண் தயங்க மாட்டாள்.

எனவே, தாலியை முட்டுக் கொட்டுக்கும் விதமாக கேட்கப்பட்ட கேள்விக்கு - மனுஷ்யபுத்திரன் - பெண்களின் நியாமான கோபத்தை பிரதிபளிக்கும் விதமாக பதில் கொடுத்திருக்கிறார்.

பதிலை மடும் வைத்து, ஒருதலையாக எழுப்பப்பட்ட சர்ச்சை - உள்நோக்கம் கொண்டதாகும்.

3 comments:

  1. மனுஸ்ய புத்திரனின் கருத்தை ஆமோதிக்கிறேன். தாலி ஒரு ஆபரணமாய் அணிந்தால் பிரச்சனை இல்லை, அடிமைப் படுத்தலின் அடையாளமாய், அதுவும் திணிக்கப்படும் போது, அதனை கழட்டி எறிவதே உத்தமம், சரியும் கூட.

    ReplyDelete
  2. enna solraanga-nrathu mukkiyam illai....yaar sollraanga enpathuthaan mukkiyam.....gandhi sonnar athe pol kadaisi varai vaazhnthaar......pora pokkil veru oru mathaththin achchaaniyai parri kandapadi pesuvatharku ivarukku urimaiyillai.urimaiyai thavaraka payanpaduththi, perumpaanmai makkalai pun paduththukiraar....yaavaaraayinum naa kaakka.....kaavaakkaal face bookil solladi paduvaar.

    ReplyDelete
  3. மன்னிக்கவும் - யார் சொன்னார் என்று பார்த்துதான் செயல்படுவேன் என்பதை நான் ஏற்பதில்லை. காந்தியின் சில கருத்துக்களை நாம் விரும்புவேன். சிலவற்றை நான் விமர்சிக்கிறேன். ஆனாலும், காந்தியை எனக்கு பிடிக்கும். - கருத்துக்களின் உள்ளடக்கம்தான் இங்கே விவாதப்பொருளாக வேண்டும். மதம் அல்ல.

    ReplyDelete

Labels