வெல்வதற்கான குறுக்கு சிந்தனை ...

மோடி ரயிலில் போனாலும் எஸ்.5, எஸ்.4 பெட்டிகளில் பயணம் செய்வாரா? என்பது சந்தேகமே. இருந்தாலும், இந்த குண்டு மோடிக்கு குறிவைத்ததாக இருக்கலாம் என்கின்றனர் பாஜகவினரும், அவரின் ஊதுகுழல்களும்.

பயங்கரவாதிகள் நடத்திய அப்பாவிகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலை, தங்களுக்கு எதிரானதாக அவர்கள் காட்டிக் கொள்ள நினைப்பது ஏன்?

"சதி" என்ற தலைப்பில் 'தினமலரில்' தலைப்புச் செய்தி வருகிறது. அதே நாள் வெடிகுண்டு வெடிக்கிறது. சதியை அறிந்திருந்தே, உளவுத்துறை கோட்டைவிட்டிருக்கிறது. ஆனால், உளவுத்துறையை வசதியாக மறந்துவிட்டு, குண்டுவெடிப்புக்கு, அவசரமாக மத/அரசியல் அடையாளம் பூச நினைப்பது ஏன்??

பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிக்கை தலையங்கத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளதுதான் நினைவுக்கு வருகிறது. 'இறுதிக் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடக்கும் நிறைய தொகுதிகள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் - பாஜகவின் மதவாத அடித்தளமுள்ள பகுதிகளில் நடக்கின்றன'

வளர்ந்த மாநகரங்களின் 'வளர்ச்சி' முகமூடியும், பின்தங்கிய பகுதிகளில் வகுப்புவாத விஷமும் பாஜகவின் வெற்றிக்கு அவசியப்படுகிறது. மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட துவேசப் பேச்சுக்களை சங் பரிவாரத்தினர் வெளியிட்டதும்.

உ.பி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்கள், இந்துக்கள் வாழும் பகுதியில் மட்டும் வாக்கு சேகரித்ததும், அப்போது வெளியிடப்பட்ட பிரசுரங்களும் - இப்போது குண்டுவெடிப்பை ஒட்டிய அவர்களின் அறிக்கைகளும், பேச்சுக்களும். அவர்களின் குறுக்கு புத்தியைக் காட்டுகிறது.

வீழ்க உங்கள் அயோக்கிய அரசியல் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels