சாதி வெறிக்கு எதிராக - ஒரு வேண்டுகோள்!

ஒரு வேண்டுகோள் !

நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று - சாதி ஆதிக்க வெறியை அம்பலமாக்கிய அபிராமி என்ற பெண்ணை உங்களுக்கு தெரியும். 



தலித் இளைஞர் மாரிமுத்துவை காதல் திருமணம் செய்துகொண்ட அவரை மிரட்டிய ஆதிக்க வெறியர்கள் (தஞ்சையை ஒட்டியுள்ள சூரக்கோட்டை நகரத்தில்) படுகொலையை அரங்கேற்றினர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக மாதர் சங்கமும் முன் முயற்சி எடுத்து போராடியதால் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் அபிராமிக்கு இந்தப்பெண்ணுக்கு பாதுகாப்பு, நிதியுதவி, அரசு வேலைக்காண உத்தரவுகள் பெறப்பட்டன. அந்த உத்தரவுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

நீதி தாமதிக்கப்படும் அநீதியை எதிர்த்து வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இந்த நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற ஒத்துழைக்க எனது நண்பர்களை வேண்டுகிறேன்.

கோரிக்கைகள் நிரைவேற வேறு உதவிகளைச் செய்யமுடிந்தவர்கள் செய்ய வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கெடுங்கள் ... 

#மனித நேயம் நம்மை இணைக்கட்டும்!

1 comment:

Labels