சன் செய்தி ஆசிரியர்கள் ராஜா, வெற்றி வேந்தன் - சஸ்பெண்ட் !

சன் செய்திகள் சானலின் செய்தி ஆசிரியராக இருந்த ராஜா மீது - செய்தி வாசிப்பாளர் அகிலா கடந்த மார்ச் 19 ஆம் தேதி பாலியல் புகார் கொடுத்தார். இதனையடுத்து, சன் தொலைக்காட்சி நிர்வாகம் அகிலாவை பணியிடை நீக்கம் செய்தது. இந்த அநீதிக்கு எதிராக பெண் பத்திரிக்கையாளர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புக்களும் களத்தில் இறங்கினர். - சன் டிவி நிர்வாகத்தின் ஆதிக்கமான செயல்பாடுகள் வன்மையான கண்டனத்துக்கு உள்ளாகின.

மாதர் சங்கத்தினர் அடுத்தகட்டமாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கவுள்ளதாக தெரிவித்தனர்...

1) உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.
2) ராஜா பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
3) அகிலாவுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியதாகவும். இத்தனை நெருக்குதல்களுக்கு பின்னரே சன் தொலைக்காட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும் - சவுக்கு இணையதளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உ.வாசுகி -அவர்கள் கூறுகையில் -

1)உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நடந்த சம்பவத்தை விசாரிக்க விசாகா கமிட்டி அறிவிக்கப்பட்டு, பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதே நேரத்தில் காவல்துறை விசாரணையும் நடக்கும்.

2) ராஜா மட்டுமல்லாது வெற்றிவேந்தனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்று தெரிவித்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், பணி நீக்கம் செய்யப்பட - காவல்துறையிடமும், விசாகா விசாரணையும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். 'இதனை மாதர் சங்கம் கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்தார்.

3) அகிலாவை பணியை விட்டு நீக்கியது தொடர்பாக சன் நிர்வாகம் அவர் மீது வேறு பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறது. - அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களை - சட்டத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டிய கடமை - சக ஊழியர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் - நம் அனைவருக்கும் உள்ளது.

பெண்கள் மீதான வன்கொடுமை ஆண்டுக்கு குறைந்தது ஒருலட்சம் வழக்குகளில் தலையிட்டு வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் - தலையீடு பாராட்டத்தக்கது.

#பெண்கள் மீதான வன்கொடுமையை ராஜா பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார். ஆனால் இந்த சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்திருக்காதவர்களாக சன் தொலைக்காட்சி ஊழியர்கள் இருப்பது வருத்தத்திற்குறியது. அப்படியொரு பாதுகாப்பற்ற சூழலில்தான் இன்றைய ஏராளமான தொழிலாளர்களும் இருக்கிறார்கள் எனும் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். 'சமூகப் பாதுகாப்புடன் கூடிய, சுய மரியாதையுடைய வேலைச் சூழல்' என்ற முழக்கம் எத்தனை பொருளுள்ளது??
 

1 comment:

  1. இவர்களை நீக்கிவிட்டார்கள், ஆனால் பெரிய முதலைகளே இதைத் தான் செய்யுதுங்க, அப்போ அவங்க உரிமத்தைத் தான் கேன்சல் செய்யணும் போல !

    ReplyDelete

Labels