தமிழர்களின் நோக்கம் பிண வணிகம் அல்ல !



நூற்றுக்கணக்கான உடல்கள் எரிந்து கரிக்கட்டையாய்க் கிடக்கிறார்கள். மனதைக் கிளர்வது போன்ற ஒரு படத்தை இணையத்தில் போட்டிருந்தார்கள்.

அதன் கீழே - "ஈழத்தில் நடந்த தமிழின படுகொலை.... பகிருங்கள் தமிழ் உறவுகளே வீடு வீடாக கொண்டு செல்வோம்...." என்று குறிப்பிட்டிருந்தார்கள். பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களை உள்ளடக்கிய குழுமத்தில் பதியப்பட்ட அந்தப் படம். சுமார் 2 ஆயிரம் முறை பகிரப் பட்டிருக்கிறது.

இந்தப் படம் உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்டதல்ல. மாறாக நைஜீரியாவில் எடுக்கப் பட்டதாக சில இணையங்களிலும். பர்மாவில் நடந்த முஸ்லிம் படுகொலை என்று சில இணையங்களிலும் சித்தரிக்கப்பட்டிருந்தது. (மொத்தத்தில் பலரும் இந்தப் படத்தை அவரவர் இன, மத, மொழி வெறியைத் தூண்ட பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சில நிமிட நேர தேடுதலுக்கு பின்னர் அந்தப் படம் ஐவாரியன் உள்நாட்டு யுத்தத்தின் போது நடைபெற்ற பெரும் படுகொலைகளைக் காட்டுவது என்பதை அறிய முடிந்தது. http://en.wikipedia.org/wiki/Second_Ivorian_Civil_War

பிணங்களின் குவியலைக் காட்டி உணர்வு வெறியேற்றுவதன் மூலம் என்ன செய்யப் போகிறோம்??? - உண்மையைத் தேடி நெருங்குவதன் மூலம் அல்லவா ஒரு நிம்மதியான வாழ்க்கையை வென்றெடுக்க முடியும்?

நல்ல விவாதத்துக்கான வெளியாக அமைந்துள்ள இணையதளங்களை அதற்கு ஏற்ற முறையில் பயன்படுத்தினால் - இன்றும் ஈழத்தில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடலாம். அத்தகைய உரையாடலின் மூலம் மெய்யாகவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க என்ன செய்ய முடியும் என்று அறிந்துகொள்ளலாம். நமது ஒன்றுபட்ட போராட்டத்தை - உணர்ச்சிவயப்பட்ட குழுவாதமாக்கி - எத்தனை காலம் சிதறடிக்கப் போகிறோம்???


#வருத்தமாய் இருக்கிறது


தங்களின் மோசடியான போர்களை நியாயப்படுத்த - ராணுவ வெறியர்கள் இத்தகைய பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. ஆனால், மனித நேயத்தின் திசை வழியில் தொடரப்பட வேண்டிய தமிழர்கள் போராட்டம் ஒருபோதும் அந்தப் பாதையில் செல்ல முடியாது.

2 comments:

  1. அது படுகொலையானவர்கள் படமல்ல, காங்கோவில் நடந்த ஒரு விபத்து
    http://www.afrik.com/article20308.html

    ReplyDelete
  2. உடல்கள் எரிந்து கரிக்கட்டை படம்-உணர்ச்சியை தூண்ட இப்படியும் மோசடி நடைபெறுகிறதா!
    //இன்றும் ஈழத்தில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடலாம். அத்தகைய உரையாடலின் மூலம் மெய்யாகவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க என்ன செய்ய முடியும் என்று அறிந்துகொள்ளலாம்.//
    அக்கறையுடன் சொல்லபட்ட பொறுப்புள்ள கருத்து. தமிழகத்தில் உள்ள ஈழ போராட்டகாரர்களுக்கு இதைபற்றி எந்த அக்கறையும் கிடையாது. இவர்கள் தமிழகத்தில் இருந்து போராடி ஈழம் பெற்று கொடுப்பார்களாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் மறு பேச்சு பேசாமல் ஈழத்தை பெற்று கொள்ள வேண்டும் இது தான் தமிழக நிலமை.

    ReplyDelete

Labels