காமம்!

மனிதர்கள் வாழ்க்கையில் காமம் குறித்த உரையாடல்கள் தவிர்க்க இயலாதவை. இன்னாரிடத்தில், இதைச் செய்யலாம் என்றும் சில வரையரைகள் இருக்கின்றன.

குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் - அனிச்சையாகவே, மனம் காமத்தைத் தேடும்போது, எல்லோரும் சரியான வடிகால்களைத் தேர்ந்தெடுக்கிறார்களா?... எல்லோருக்கும் சரியான வழிகாட்டுதல்கள் கிடைத்துவிடுகின்றனவா? - என்று கேட்டால் இல்லையென்றே சொல்ல முடியும்.

'காமம் தவிர்த்த காதல் நட்பு - காமத்தோடு சேர்ந்த நட்பு காதல்' - என்றொரு விளக்கத்திற்கு ஒரு சமயத்தில் நான் வர்ந்து சேர்ந்தேன். அது நீடித்திருக்கவில்லை. சமீபத்தில் நண்பர் அராத்துவின் பதிவில் சில விசயங்கள் - அது அப்படியல்ல என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.

உடல் இச்சைகளை அளவுகோளாக வைத்துக் கொண்டு உறவுகளை அளவிட முடியுமா என்று தோன்றவில்லை. - பசிக்கிறது, சோறுபோட்டால் அவள் அம்மா. சோறு போடாவிட்டாலும், என் பசிக்காக அவள் துடித்தால் அந்த உறவுதான் நெருக்கமானது.

காம இச்சைகளை இப்படித்தான் தீர்க்க வேண்டும் என வரையருத்துக் கொள்கிறோம். அது இருவரின் சம்மதத்துடன் இருக்க வேண்டும். இன்னதுதான் காமம் என்று அறியும்வரை தடுமாற்றங்கள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவற்றை புரிந்துகொண்டு - ஒருவனுக்கு ஒருத்தியென்ற கட்டுப்பாட்டை ஏற்கும் மனிதர்கள் - உயர்ந்த நாகரீகமானவர்கள்தான்.

தடுமாற்றம் இயல்பென்பதை புரிந்துகொள்ளும் சமூகம் - பாலியல் கல்வியை தன் இளம் தலைமுறைக்கு வழங்க வேண்டும். அது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் என்ற வாதம் மிக நியாயமானது. ஆனால், இன்றைக்கு வயது மூத்த மனிதர்களிடத்தும் - பாலியல் இச்சைகள் பற்றிய தெளிவு இல்லை என்பதே அனுபவமாக இருக்கிறது.
---

காமம் - முறையாகப் புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் பட வேண்டிய உடலியல் தேவை. ஆனால், அதனை வைத்துக் கொண்டு - நட்பையோ, காதலையோ, திருமண பந்தத்தையோ அளவிட முடியாது என்பதே - நான் இன்று அடைந்திருக்கும் தெளிவு.

நம்பிக்கை - ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் மதிப்பு - தவறுகளை அங்கீகரிக்கும் நேசம் - ஒருவருக்கு ஒரு துன்பமென்றால் பதபதைக்கும் உள்ளுணர்வு - இவையெல்லாம் இல்லாமல் - எந்த உறவும் நீடித்திருக்காது என்பதே திரும்பத் திரும்ப உண்மையாகிறது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels