ஆடை விலகியவள் !

"வா... வந்து என்ன தொட்டு பாரு ... கடிச்சு துப்பிடுவேன்" ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.

நேற்றிரவு இது நடந்தது - இரண்டு தெருவோரத்து வாசிகள் கடுமையான வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். சற்று புத்தி பேதலித்தவர்கள் போல காணப் பட்டாலும், இந்தச் சண்டை தன் உடலைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வீசப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சில நிமிடங்களில் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
-

இன்று காலை, பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் மிக அமைதியான தெருவில் - சாலையோரக் கடை ஒன்றில் கம்மங்கூல் குடித்து விட்டு, திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையோரத்தில் ஒரு உடல் அசைவற்றுக் கிடந்தது. அவள் முகத்தில் அழிக்க முடியாத களைப்பு. ஆடை கிழிந்து - மிகவும் அழுக்காக இருந்தது.

நேற்றிரவு பார்த்த பெண்ணோ??? ... அருகே சென்று உற்று நோக்கினேன். அவளில்லை... என்னைப் பார்த்ததும் அங்கிருந்து அகன்று வெகுதூரம் - ஏதேதோ வசவு செய்தபடி வேகமாக அகன்றுவிட்டாள்.

நானுமொரு ஆண். நானும் ஒரு ஆதிக்கவாதி. - என்ற பிம்பம் அவளை விரட்டியிருக்கலாம். - அவர்கள் பிச்சைக்காரர்களல்ல. கையேந்தவும் தெரியாதவர்கள் - பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகிற உலகத்தில் தனக்கென யாருமின்றி கைவிடப்பட்டவர்கள்.

#ராணுவமும், போலீசும் நிரம்பியிருக்கும் உலகத்தில் - மரணத்தில் மட்டுமே ஒளிந்துகொள்ள முடிந்த ஏராளம் சாமானியர்கள் வசிக்கிறார்கள். அன்பு மழையில்லாமல் உலகம் வறண்டு கிடக்கிறது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels