செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம் !

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்படும் செல்போன் டவர்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரித்திருப்பதாக ”டெஹெல்கா” செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியை மையமாக வைத்து டெஹெல்கா மற்றும் கோஜெண்ட் (Cogent eMr Solutions limited) எனப்படும் தனியார் நிறுவனமும் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.

ந்தியாவில் தொலைதொடர்புத் துறையின் அதிவேக வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய புதிய நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்து தங்கள் சேவையைத் துவக்கியுள்ளன. அவர்கள் புதிய சந்தையைப் பிடிப்பதிலும், ஏற்கனவே பிடித்துள்ள சந்தையை தக்கவைப்பதிலும், மிகுந்த அக்கரை காட்டுகின்றனர். இதன்காரணமாக, செல்போன் டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக டெல்லியில் 2006 ஆம் ஆண்டில் 1700 செல்போன் டவர்கள் இருந்தன. தற்போது அது சுமார் 6 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. 

டெல்லியில் 138 சதம் மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒருத்தருக்கு 1 போன் என்ற நிலை மாறி பலர் 2 செல்போன் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். 

இதில் சென்னை மாநகரம் டெல்லியை மிஞ்சியுள்ளது. சென்னையில் 143 சதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும், அதனைத் தொடர்ந்து மும்பையில் 112 சதமும் கொல்கத்தாவில் 102 சதமும் செல்போன் பயன்பாடு உள்ளது.

கூடுதல் லாபத்தைக் கொண்டாடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பாதுகாப்பு விதிகளை ஓரமாக ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால்  காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வைக்கப்படும் உயரம் குறைந்த டவர்கள் இந்திய நகரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. 

செல்போன் டவர்களில் இருந்து இஎம்ஆர் எனப்படும் மின் காந்த அலைகள் வெளியாகின்றன. இந்த அலைகள் நம்மீது உடனடியாக விளைவை ஏற்படுத்துவதில்லை. மனிதர்களின் மரபணுக்கள் (டிஎன்ஏ) மீது தாக்குதலை தொடுப்பதில்லை. ஆனால் புகையிலையைப் போல, மனித உடலில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

ஒருவர் தொடர்ந்து 3 வருடங்கள் இக்கதிர்களால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தூக்கமின்மை, உடல் சோர்வு ஏற்படும். 4 முதல் 5 வருடங்களில் இந்த பாதிப்பு பார்வைக் கோளாராகவும், உடல் வலி, தோல் வியாதியாக வெளிப்படும். 5 முதல் 10 வருடங்களில் இதயக் கோளாறு ஏற்படலாம். 10 வருடங்களைத் தொடும்போது அது மூளைக் கட்டி எனப்படும் பிரைன் டியுமர் ஆகவோ, அல்லது கான்சர்  சார்ந்த உயிர் குடிக்கும் வியாதியாக மாறுகிறது.

நாம் சாதாரணமாக உபயோகிக்கும், செல்போன், ப்ளூடூத், மின் அடுப்பு (மைக்ரோ வேவ் ஓவன்), தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி உள்ள மின் சாதனங்கள் அனைத்துமே சிறிய அளவில் மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. ஆனால், பாதுகாப்பு எல்லைக்குள் கதிர்வீச்சின் அளவு இருக்கும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அப்படியே பாதித்தாலும், பொருட்களின் உரிமையாளர், அவரது குடும்பத்தாரை அது பாதிக்கும். ஆனால் பொது இடங்களில் வைக்கப்படும் செல்போன் டவர்கள், பொதுமக்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

குறைந்த உயரத்தில் வைக்கப்படும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகள், அருகிலுள்ள சுவர்களில் எதிரொலிக்கின்றன. மக்களின் மீது நேரடி விளைவை ஏற்படுத்துகின்றன. 

ICNIRP எனப்படும் சர்வதேச அமைப்பு வெளியிட்ட 1996 ஆம் ஆண்டு வெளியிட்ட சுகாதார ஆய்வறிக்கையில் ஒரு சதுர மீட்டரில் 600 மில்லி வாட் அளவு கதிர்வீச்சு இருக்கும்வரை சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. இதையே இந்திய தொலை தொடர்பு அமைப்பும் ஏற்றுகொண்டுள்ளது. ஆனால் ஏட்டளவில் ஏற்றுக் கொண்டிருப்பதால் யாருக்கு பயன்?.

டெல்லியை மையமாக வைத்து நடத்தப்பட்ட டெஹெல்கா ஆய்வில்: 40 சதம் இடங்கள் அதிகபட்சம் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பான 600 மி.வா அளவை விட பல மடங்கு கதிர்வீச்சுடைய பகுதிகள். 31 சதம் பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதிகள். (2 - 6 மடங்கு அதிக கதிர்வீச்சு) 9 இடங்கள் 600 மி.வா.வை விட சற்று கூடுதல் கதிர்வீச்சு கொண்டிருந்தன. அதாவது பரிசோதிக்கப்பட்ட 100 முக்கிய மையங்களில் 20 சதம் மட்டுமே கதிர்வீச்சு ஆபத்து கட்டுக்குள் இருந்தது. (to see the table click here >>>> IIIIIIII ) காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள யமுனா விளையாட்டு அரங்கம் உட்பட முக்கியமான பல பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதிகளாக இருந்தன.

டெல்லியைக்காட்டிலும், சென்னையில் இந்த பாதிப்பு கூடுதலாக இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் மேற்கண்ட் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ICNIRP இன் கட்டுப்பாட்டு விதிகளை பல நாடுகள் சரியாக கடைப்பிடிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதிப்பதில்லை. அத்துடன் டவரின் உயரம் 150 அடிக்கு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். சைனாவில் கதிர்வீச்சின் அளவு 600 மி.வா க்கு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தபட்டுள்ளது. எனவே, இது முடியாத ஒன்றல்ல. இந்தியாவும் செல்போன் டவர்களுக்கென விதிகளை வகுத்து, அவற்றை உறுதியாக அமல்படுத்த வேண்டியது அவசியம்.
புதிய வசதிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்களை பாதிக்காத வகையில் அவை அமைந்திருக்க வேண்டும். மூளைக் கட்டியுடன் அவதிப்பட வைக்கும் வளர்ச்சியை யார் விரும்புவார்?

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels