மீண்டுமொரு ரகசியக் கேமிரா ...!

ஏதோ ராணுவ ரகசியத்தைப் பற்றிச் சொல்லவில்லை. சென்னையில் செயல்படும் ஒரு பெண்கள் கல்லூரியின் கழிப்பரையின் நிலையை ரகசிய காமிராவில் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த அவலத்தை பேசும் பெண்களை முகம் மறைத்துக் காட்டுகிறார்கள். 



கழிவு வெளியேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. கல்வி கற்கும் இடமே அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து வெளியில் பேசவே வாய் திறக்க முடியாத அச்சத்தை மாணவர்கள் கொண்டிருப்பதும் இன்றுமே மாறிடாத யதார்த்தம்.

மாணவர்களின் புரட்சி வெடித்து அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தூக்கியெரியப்பட்டதாகவும் - திராவிட கட்சிகளின் சகாப்தம் தொடங்கியதாகவும் பலர் சொல்கிறார்கள். பத்திரிக்கைகள் ‘ஸ்டூடண்ட் பவர்’ என தலைப்பிட்டு - மாணவர் போராட்டங்களை வரவேற்கிறார்கள்.

தான் அன்றாடம் புழங்கும் கல்லூரியின் நிலையை உள்ளுக்குள் புழுங்குவதுடன் நிறுத்திக் கொள்ளும் அதே மாணவன் - வெளிப்பிரச்சனைகளை ஓராளவு தைரியத்துடன் பேச வந்தது நல்ல மாற்றம். ஆனால் அது என்ன சீசனல் கோபமா?

இந்தக் கொடுமைகள் சகித்திக் கொள்ளப்படுவதற்கு இன்னொரு காரணம் ஆசிரியர் சமூகமும், பெற்றோர் சமூகமும். மதிப்பெண்களால் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கவில்லை என்பது தெரிந்தும், 101 வது மூட நம்பிக்கையாக அவர்கள் மதிப்பெண்களைத் தூக்கிச் சுமக்கிறார்கள்.

விளையாட்டில் கவனம் செலுத்தும் கல்லூரிகள் எத்தனை? உடற்பயிற்சி, கலா ரசனை, சமத்துவப் பண்பாட்டை போதிக்க கவனமெடுக்கும் கல்விச் சாலைகள் எத்தனை? எத்தனை மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் கடமைகள் தெரியும்? ஒரு குடிமகனின் உரிமை தெரியுமா? - கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த அறிவு உண்டா?

நீதி எது, அநீதி எது என்ற தெளிவுதான் - காலம் எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும். #அதுவரை சேவலே கூவிக் கொண்டேயிரு 

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels