கெஜ்ரிவால் ராஜினாமாவும் - அம்பலமான கூட்டணியும்....

அரவிந் கெஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு சரியானதே.

இதுதான் நடக்குமென்பது நமக்கு முன்னமே தெரியும். மத்திய ஆட்சியில் காங்கிரஸ் - பாஜக அல்லாத சக்திகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் - அவர்களை ஆட்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன், சரியான சமயத்தில் கவிழ்த்துவிடுவதிலும் காங்கிரஸ், பாஜக வெட்கமின்றி கைகோர்த்துள்ளனர்.

விவாதிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகளின்போதும், மக்கள் விரோத மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்போதும் - வெற்றுக் கூச்சல்களினிடையே - ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் பணியிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டை அம்பலப்படுத்தியது வரவேற்புக்கு உரியது.

நேற்றையை தில்லி சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும் எவரும் - ஊழலுக்கு எதிரான எந்த விவாதத்தையும், உறுதியான நடவடிக்கையையும் கண்டு காங்கிரசும் பாஜகவும் எத்தனை அச்சமடைகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்க முடியும்.

நிர்வாக அனுபவமற்ற, இன்னும் தங்களை முழுமையாக வெளிப்படுத்தியிராத புதிய சக்திகள் என்றாலும், ஆம் ஆத்மி இந்த சூழலில் சரியான முடிவையே எடுத்துள்ளது. அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - பெறு நிறுவனங்களின் கூட்டணியை முடிந்த அளவு அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மி தொடர்பான விமர்சனங்கள் என்ன இருந்தாலும் - தில்லி மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு என்ற முறையில் அவர்கள் வரவேற்புக்கு உரியவர்கள். - அரசியலற்ற பொதுமக்களை களத்திற்கு இழுத்துவந்து, சில உண்மை அனுபவங்களைக் கொடுத்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் Gnani Sankaran சொல்வதைப் போல, 'ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தாக்கம்'. அது நமக்கு கொடுத்துள்ள அனுபவங்கள் முக்கியமானவை.

#எல்லாவற்றையும்_மக்கள்_பார்க்க_வேண்டும்...

2 comments:

  1. ஆம் ஆத்மி கட்சி சரியான முடிவையே எடுத்துள்ளது ஒரு வேலை ஆட்சியை தொடர்ந்திருந்தால் அது பெருமளவில் மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதால் பெரிய கூடுதல் செலவு ஏற்படாது இது சரியான நேரமே. மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக வின் இந்தியாவில் உள்ள சுவிஸ் வங்கிகளில் ஒன்று முகேஷ் அம்பானி என்று தோலுரித்து காட்டியுள்ளார். இவ்வளவு நிகழ்ந்தும் வீரப்ப மொய்லி இரண்டு மடங்காக கேஸ்விலை அதிகரிப்பதை எக்காரணம் கொண்டும் திரும்ப பெறமுடியாது என்று சொல்கிறார்கள். முகேஷ் அம்பானியின் 80 சதவீதம் முதலீடு வெளி நாடுகளில் செய்திருக்கிறார் எனவே காங்க் தலைவர்கள் அனைவரும் அடுத்த தலைமுறை அனைத்திற்கும் வெளி நாட்டில் ஒளிந்துகோண்டே வாழத்தேவையான அனைத்தையும் முகேஷ் அம்பானி செய்வார். இந்தியாவில் உள்ள 20 சதவீத முதலீடுகளை முடக்கினாலும் அதற்க்கு அவர்கள் கவலைபட மாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் காங்க் தலைவர்கள் வெளி நாடு செல்ல தடை விதிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. ஊழலைத் தடுக்கும் சட்டத்தையே தடுக்க எதிரி புதிரியான காங்கிரசும் பாஜக-வும் கை கோர்த்ததிலேயே தெரியவில்லையா இரு கட்சிகளின் அவ-லட்சணத்தை, அத்தோடு ஆட்சியை கவிழ்த்தும் மறு தேர்தலையும் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வந்துள்ளார்கள். உண்மையில் ஆம் ஆத்மி ஒரு கட்சியல்ல கருத்தாக்கம், மாற்று அரசியலில் நம்பிக்கை இழந்து பயந்து பயந்து கிடந்த மக்களை உசுப்பிவிட்ட கருத்தாக்கம், இப்போதும் நாம் விழிக்கவில்லை எனில் இனி எப்போதும் விழிக்கவே இயலாது. மாற்றங்களை ஏற்படுத்த பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்ப்போமாக, நம்பிக்கையை விதைப்போமாக.

    ReplyDelete

Labels