குடும்பச் சிறையும் - சமூக மாற்றமும் ...

மனைவியை விரல்களை மடக்கி, கையால் குத்திவிடலாம். பின்னர், பரிசுகள், அன்பளிப்புகள் வழங்கலாம். இவை மூலம் அவரை ஆற்றிவிட முடியாது.

தொழிலாளருக்கு அதிக கூலி, வேலைத் தளத்தில் சில சலுகைகள் கொடுக்கலாம். இவைகள் விடுதலை கொடுத்துவிடாது.

பெண்களும் தொழிலாளார்களும், தம்மை ஒடுக்குபவரின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும். தம்மை அடக்குபவரின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டு, புதிய வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும்

- மைக்கேல் டி.ஜேட்ஸ்

(”குடும்பச் சிறையில்” என்ற நாவல் படித்துக் கொண்டிருக்கிறேன். அது இப்படியான வாசகத்துடன் துவங்குகிறது)

சமூக மாற்றத்திற்கு போராடும் நாம், முதலாளித்துவத்தின் சுரண்டலையும், நிலப்பிரபுத்துவ சாதி ஆதிக்கத்தையும் எந்த அளவு எதிர்க்கிறோமோ. அதை விடக் கடுமையான முறையில், ஆணாதிக்கத்தை அடித்து வீழ்த்த வேண்டும். ஏனென்றால், எதிரே நிற்கும் எதிரியை விட, உள்ளிருந்து தாக்கும் எதிரி கடுமையானவன்.

1 comment:

  1. எனக்கு ரொம்ப பிடிச்ச போட்டோ இது, அப்பா அம்மாவிற்கு என் அன்பை சொல் சிந்தா...

    ReplyDelete

Labels