யுவன் - இளையராஜா: போற்றுதலுக்குரியது என்ன?

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியுள்ளது விவாதப் பொருளாகிறது. யுவன் மனதுக்கு நெருக்கமான கடவுள் யார்? என்பதையும், கடவுளே வேண்டாமென்றும் முடிவு செய்வது அவரின் தனிப்பட்ட உரிமை.

ஆனால் அவர் மதம் மாறிய செய்தி வந்தவுடன் - இதை அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் செய்கிறார் என்ற கொச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா டுவிட்டர் தளத்தில் கொடுத்துள்ள விளக்கம்: " நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை"

அவர் எந்தப் பெண்ணோடு தன் உடலையும், சொத்துக்களையும் பகிர்ந்துகொள்கிறார் என்பது நம்மைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவல்ல.

என்னைப் பொருத்தமட்டில், அவரது குடும்பத்தினர் யாரும் மதம் மாறாமல் தொடர, யுவனின் சொந்த முடிவை ஆதரித்திருப்பதுதான் இங்கே கவனித்து, பாராட்ட வேண்டியதும், பொது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியதுமான விசயமாகும்.

ஒரு குடும்பத்தில், பல மத நம்பிக்கையுள்ளவர்கள் தொடர முடியும் என்பது பெருமைக்குறிய உதாரணம். இளையராஜா, யுவன் என்ற இருவரின் பக்குவமான ஆளுமை இங்கே வெளிப்படுகிறது.

அவர்களுக்காக பெருமிதம் கொள்வோம் ...

4 comments:

 1. இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம் செய்யவே என்ற ஐயமும் எழுகின்றது. நன்றிகள்.

  ReplyDelete
 2. மதம் மாறுவது அவரவர் சொந்த விருப்பம், அதில் தலையிட எனக்கு விருப்பமில்லை.

  ஆனால் இஸ்லாமில் சேர விரும்புவோரை எப்பிரிவில் சேர ! சுன்னாவிலா, சியாவிலா சூஃபியிலா இபாதியிலா அக்மதியாவிலா மெக்தாவியிலா. சுன்னா என்றால் எப்பள்ளியில் சேரச் சொல்லுவீர்கள், வகாபிய வழிமுறையா, ஹனாபியா, மாலிகி, ஷாஃபி, ஷலாஃபி எதில் சேரலாம். அல்லது சியாவில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா, சூஃபியில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா அல்லது இவை யாவும் சாராமல் ஆங்கொன்று ஈங்கொன்றாய் இருக்கும் சிறிய பிரிவுகளிலா... :)

  எல்லா மதங்களில் உள்ளது போலவே இஸ்லாமிலும் உட்கட்சிகளும் பூசல்களும் உள்ளனவே.

  கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை அல்லாவிகளும் சுன்னாக்களும் சிரியாவில் கொன்றொழித்துள்ளார்கள், ஏன் தாங்களவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

  அதில் இருந்தே தெரியவில்லையா, எல்லாம் இந்து மத வேஷிகள் போலத் தான் கிறித்தவமும் இஸ்லாமும் கூட செயல்படுவதை.

  மத அரசியல் வியாபாரத்தில் இவரையும் கூட புரோக்கர்களாகவே கருதுகின்றேன். நன்றிகள்.

  ReplyDelete
 3. திரு Sindhan, எனக்கு தெரிஞ்சவரைக்கும் மதம் ஒரு போதை என்ற கொள்கையை பின்பற்றுவங்க நீங்க. யுவன் ராஜா மதம் மாறியதற்கு மட்டும் ஏன் இவ்வளவு போற்றுதல்?

  ReplyDelete

Labels