பரதேசி குறித்த விவாதத்தில் மதவாத அயோக்கியர்கள்

பரதேசியில் - கிருத்துவ பாதிரியார் மதம் மாற்றுவதாக வரும் காட்சியைக் காட்டி - "பார்த்தீர்களா... அயோக்கியத்தனம்" என்று சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆம், அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். 

வால்பாறை எஸ்டேட் உருவாக்கத்தில் கொத்தடிமை நிலைமையில் மக்கள் தவித்த போது, மந்திரித்து தாயத்துக் கட்டி - அவர்களின் கூலியை ஒட்டச் சுரண்டிய சாமியாடி என்ன செய்தார்?

அவர்களை தலித்துகளாக்கி - "நியாயமாரே கூலியைக் குடுங்க நியாயமாரே... " என்று கெஞ்ச வைத்த - இந்து மதம் என்ன செய்தது?? - அவையெல்லாம் அயோக்கியத்தனம் என்று கதறாதவர்களுக்கு, வழிபாட்டு உரிமை மீதான அக்கறை எங்கேயிருந்து வந்தது?

சாதிகளாக மக்களை கூறுபோட்டு வைப்பதே தன் தர்மமாகக் கொண்டிருக்கும் இந்து மதவாதிகளின் ஆதிக்கத்தின் பார்வையிலிருந்து இது வருகிறது. 


மதம் மாறுவது இன்றுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்ட மக்கள் - சாதியின் கொடுமையிலிருந்து ஆறுதல் தேடி நிமிரும்போது - அவர்களுக்கு எந்த போக்கிடமும் இருக்கக் கூடாதென்பதே மதவாதிகளின் விருப்பம். எனவே கிருத்துவ மதமாற்றம் குறித்து இந்துமதவாதிகள் செய்வது  ஒரு மோசடியான வாதமேயன்றி, தலித்துகள் மீதான அக்கறையல்ல ...

2 comments:

  1. கடைசியில் ஓரு நேர்மையான கருத்து

    ReplyDelete
  2. மிக்க நன்றி!

    ReplyDelete

Labels