உலகளாவிய உரிமைக்குரல் - 3

Download pdf : - Go to page:  I 1 I I 2 I I 3 I

வரலாற்றின் வேர்பிடித்து வருங்காலத்தை
செப்பனிடுவோம் வரலாற்றிணை
புரிந்துகொள்வது சிக்கலான பணி
என்றாலும் கடந்தகாலத்தை கொண்டு
தற்கால சமுதாயத்தின் நிலையை
மாற்றும் எண்ணமுடையோர்
அப்பணியை முக்கியமானதாகக்
கருதிச் செய்யவேண்டியுள்ளது.
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதிவழக்கு
வழக்கு, சதிவழக்கு அதைத்தகர்த்தெரிவதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் என்ற நீதிமன்ற வளாகத்தை கடந்து சமூக அவலங்களையும் மோதல்களையும் இந்த சிறிய புத்தகம் விவாதிக்கின்றது. மார்க்சும் எங்கல்சும் நூலகங்களிலும், ஆய்வுக்கூடங்களில் இருந்துகொண்டு மட்டும் பணியாற்றவில் லை களத்தில் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை பகிரங்க இயக்கமாகவும், வெகுமக்கள் இயக்கமாகவும் மாற்றியது.கம்யூனிஸ்ட் லீக்கில் உருவான இடதுஅதிதீவிர போக்கை வெற்றிகொண்டது வழக்குகளை பிரச்சாரமேடையாக மாற்றியது, சதிவழக்குகளை அம்பலப்படுத்தியது என்ற ஐந்து தளத்தில் இப்புத்தகத்தை உள்வாங்கிக்கொள்ளலாம்.
ஒன்று, காரல்ம்ர்க்சும், ஏங்கல்சும் பாரிசில் தங்கி அங்கு ஐர்மானியிலிருந்த வந்து சிதறுண்டுகிடந்த தொழிலாளர்களை திரட்டிட முயற்சிஎடுத்தனர். அப்போது நீதியாளர் கழகம் என்ற அமைப்பு இருவரையும் தங்களது அமைப்பில் இணைய அழைத்தது.இதை ஏற்ற அவர்கள் இரகசிய அமைப்பை பகிரங்க அமைப்பாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைந்து, அவ்வமைப்பை கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றி பகிரங்க அமைப்பாக்கினர். அதேநேரத்தில் ஐர்மனியில் வேட்டையாடப்பட்ட புரட்சிகர தொழிலாளர்கள் பாரிசிற்கு தப்பிவந்து வேலையின்றி நடைபாதை யிலும்,பூங்காக்களிலும்,தெருக்களிலும் முடங்கிக் கிடந்தனர். இவர்களை பாதுகாக்க மார்க்ஸும், எங்கல்சும் அகதிகள் குழு அமைத்து உதவிசெய்தனர்.
இரண்டு, பாரிசின் பலபகுதிகளில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும்கூட தொழிலாளர் குழுக்கள் ரகசியமாக மட்டுமே செயல்படுவது, சதிவேலைகள் மட்டுமே செயல்தளமாக இருந்ததை மாற்றி பகிரங்கமாக திட்டத்தின் அடிப்டையில் செயல்படும் இயக்கங்களாக உருவாக வழிவகுத்தனர். மூன்று, கம்யூனிஸ்ட் லீக் பகிரங்கமாக செயல்பட்டபோதே அவ்வமைப்பில் உடனடியாக கம்யூனிச புரட்சி நடத்த வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு புறம்பான அதிதீவிர போக்கை களைஎடுத்து லீக்கை காப்பாற்றினர்.
நான்காவதாக, கைதுகள் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், எங்கல்ஸ், பதிப்பாசிரியர் கோர்ப் ஆகியோர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்க்ஸ் மூன்றுபேர்களுக்காகவும் வாதாடினார்.ஒவ்வொரு அதிகாரியும் தீங்கான நடவடிக்கை எடுப்பதை நீங்கள் அனுமதிக் கிறீர்கள்.அத்தீங்கை கண்டிப்ப வர்களை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.  தன் அண்டையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக முன்வரவேண்டியது பத்திரிக்கை களின் கடமையாகும். ஜெர்மானியில் மார்ச் மாதம் நடைபெற்ற புரட்சி மேல்மட்ட சீர்திருத்தம் செய்துவிட்டு அடிமட்டத்தை அப்படியே வைத்துள்ளது......தற்போது பத்திரிக்கைகளின் முதல் கடமை நடப்பு அரசியல் அமைப்பின் அனைத்து அடித்தளங்களையும் தகர்த்தெரிய வேண்டும் என்பதாகும். என்று நீதிபதிகளுக்கு முன்னால் அக்கட்டுரையின் நியாயத்தையையும்  பத்திரிக்கையின் சமூக கடமைகளையும் எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் வாழ்த்துக்களிடையே விடுதலை செய்யப்பட்டனர். மறுநாள் புரட்சிக்குத்தூண்டல் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், ஷாப்பர், ஸ்னெய்டர் ஆகிய மூவர்மீதான வழக்கிலும் மார்க்ஸே வாதாடினார். புரட்சி என்பதை சட்டவடிவத்திற்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்கமுடியாது என்றதுடன் சமூகம் என்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற தங்களின் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகளை பார்த்து மார்க்ஸ் கூறினார். அத்துடன் சட்டம் அது குறிப்பிட்டகாலத்தில் நிலவும் பொருள்உற்பத்தி முறையிலிருந்து தோன்றுகின்றது. ஆகவே புரட்சி என்பது பழைய சட்டமேல்கட்டுமானத்தை அழிக்கும் ஜீவாதார கடமையை கொண்டுள்ளது என்று வாதங்களை முன்வைத்தார்.மன்னன் எதிர்ப்புரட்சி செய்தால்  ஒருபுரட்சியின் மூலம் மக்கள் அதற்கு பதில்தரும் உரிமையை பெற்றுள்ளனர் என்றார். வழக்கிலிருந்து விடுதலைப்பெற்றனர். சட்டம் பற்றிய நீதிபதிகளின் கருத்துமுதல்வாத கருத்துக்களை  தகர்த்து பொருள்முதல்வாதக் கருத்துக்களை நிலைநாட்டினார். அன்று நீதிமன்றத்தை மார்க்ஸ் மிகப்பெரும பிரச்சார மேடையாக மாற்றினார். வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப்பாதையை பயன்படுத்தினர்.  ஐந்தாவதாக, மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பேச்சுக்களும், எழுத்துக்களும்  கம்யூனிஸ்ட் லீக்கின் பணிகளும் பிரெஷ்யாவில் புரட்சியை கொண்டு வந்துவிடும் என்று பிரெஷ்ய அரசு அஞ்சியது. எனவே லீக் உறுப்பினர்கள் பத்துபேர்கள் மீது புரட்சிநடத்தமுயற்சித்ததாக சதிவழக்கை புனைந்து கைதுசெய்தது. மார்க்ஸ், எங்கல்ஸ்  இருவரையும் இவ்வழக்கில் இணைக்க முயற்சி செய்தது. இவர்கள் இருவரும் லண்டனிலிருந்துகொண்டு பிரெஷ்யாவின் கோலோனில் நடைபெற்ற சதிவழக்கை முறியடிக்க பணியாற்றினர். இந்த வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி அவற்றை பலநகல்கள் (பலபேர்களை வைத்து எழுதவேண்டிய பணி) எடுத்து ரகசியமாக கோலோன் நகருக்கு அனுப்பிவைக்க வேணடிய பெரும்பணியை செய்தார்.இதற்காக தனது வீட்டையே அலுவலமாக்கினார். இந்த சதிவழக்கை பயன்படுத்தி டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பிரபலமான பத்திரிக்கைகள் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசியது.கொளுத்துப்போன பிச்சைக்காரர்கள் கூட்டம் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று எழுதியது.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வேலையையும்  மார்க்ஸ்,எங்கல்ஸ் இருவரும் செய்தனர். பிரதானமாக மார்க்ஸ் தனது குடும்ப வருமானத்திற்காக எழதவேண்டிவைகளை நிறுத்திவிட்டு வழக்கிற்கான பணியில் இறங்கினார். கடந்த பலவாரங்களாக குடும்பத்தின் சாப்பாட்டிற்காக பாடுபடவேண்டியதற்கு பதிலாக அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து கட்சியை பாதுகாக்கவேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது என்று தனது நணபருக்கு எழுதினார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. செருப்பில்லாததாலும், மேலேஉடுத்திக் கொள்ள உடை இல்லாததாலும வெளியேபோகமுடியாமல் வீட்டிலேயே முடங்கிகிடக்கிறேன் என்று தனது நண்பனுக்கு எதினார். வழக்கு நடைபெற்றபோது அவரது
கட்டுரையாளார்.ஏ.பாக்கியம்

கால்சட்டையும், காலணியும், கோட்டும் அடகு கடைக்கு சென்றிருந்தது.வெள்ளைத்தாள் வாங்குவதற்கே நிதிபற்றாக் குறையாக இருந்தது. மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தின் வறுமைக்கிடையிலான உழைப்பாலும், அவர்களின் வழிவந்தவர்கள் தியாகத்திலும், அவர்கள் சிந்திய உதிரத்திலும், இழந்த வாழ்க்கையின் மேலேதான் நமது உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உணர்வு புத்தகத்தை படிக்கும்போது ஏற்படுகிறது.  மேற்கண்ட ஆறு புத்தகங்களும் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நம்கண்முன் நிறுத்துகின்றது, சுமார் முன்னூறு ஆண்டு வரலாற்றின் ஆணிவேரை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது. மாவோ சொன்னாரே உலகவரலாற்றை உருவாக்கும் உந்துசக்தி மக்கள்தான். மக்கள் மட்டுமேதான் என்றாரே அந்தவார்த்தைகளை இப்புத்தகத்த் படிப்பதன் மூலம் உணரமுடியும்.எனவே வரலாற்றின் வேர்பிடித்து வருங்காலத்தை செப்பனிடுவோம் வரலாற்றிணை புரிந்துகொள்வது சிக்கலான பணி என்றாலும் கடந்தகாலத்தை கொண்டு தற்கால சமுதாயத்தின் நிலையை மாற்றும் எண்ணமுடையோர் அப்பணியை முக்கியமானதாகக் கருதிச் செய்யவேண்டியுள்ளது.


0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels