பத்திரிக்கையாளர்கள் கொலை: வீடியோ காட்சி .... (விக்கிலீக்ஸ்)


 இதுபற்றி வாசிக்க ... [1] [2] [3] [4]

இராக் போரின்போது, போர் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் 2 செய்தியாளார்களை, அதிகாரிகள் உத்தரவின் பேரில் சுட்டு வீழ்த்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ பதிவாகிறது. அப்போது பின்னணியில் ஒருவர் நிருபர்கள் இருக்கும் இடம் நோக்கி திரும்பச் சொல்கிறார். பின்னர், மேற்கண்ட இரண்டு பத்திரிக்கையாளர்களை அடையாளம் காட்டி பேசுகிறார். சில நிமிடங்களில் அங்கு நோக்கி சரமாரி குண்டு பொழிகிறது. 12க்கும் அதிகமானோர் அங்கே செத்து மடிகிறார்கள். (வீடியோ இங்கே)

ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க அரசிடம், “தகவலறியும் உரிமைச் சட்டத்தில்” இந்த வீடியோக்களைக் கேட்டுள்ளது. ஆனால், பெண்டகன் அதிகாரிகள் வீடியோவை தர மறுத்துவிட்டனர். தற்போது விக்கிலீக்ஸ் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. அதில் வெளியாகியுள்ள 38 நிமிட வீடியோவில், கொலைகள் நேரலையாக பதிவாகியுள்ளன. இராக் போரின்போது சுமார் 140 பத்திரிக்கையாளர்கள் கொலையுண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமாதானமும், அமைதியும், பட்டினியற்ற வாழ்க்கையும் கொண்ட ஜனநாயக சமூகத்திற்கு கனவு காணும் சாதாரண மக்களிடம், அமெரிக்காதான் ஜனநாயக நாடு, அமெரிக்காவின் நட்பு தேவை என்று இந்திய ஆட்சியாளர்கள் வாதிடும்போதும், பத்திரிக்கைகள் அவர்களுக்கு ஒத்தூதி ஒபாமாவை வரவேற்கும்போதும், மேற்கண்ட உண்மை நம்மை ஆத்திரப்படுத்துகிறது. விக்கிலீக்ஸ்க்குப் பின்னரேனும், இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels