சுயநலமிகளின்கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டிருப்பதால் .. வாழ வழி தெரியாமல் சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 80 சதம் பெண்கள் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடுமைகளுக்கெல்லாம் உச்சமாக, ஒரு வருடத்தில் 2 லட்சம் குழந்தைகள் அதுவும் 5 வயதுக்கு உட்பட்டோரை பட்டினிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பொதுச்சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்படும் அதே நேரத்தில், இந்திய உணவுக்கழகத்தில் தேங்கிக்கிடக்கும் 6 லட்சம் டன் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு எடுத்து வழங்க திராணியற்றிருக்கிறது அரசு. இத்தனை கொடுமைகளை எதிர்க்க திராணியற்று இருப்பது இந்திய இளைஞர்களுக்கு பெருமையா?.
இரவில் வாங்கினோம்
இரவு விடியாது
சுயநலப் பேய்களை
சுட்டுப் பொசுக்கிடும்
சூரியக் கண்கள்
திறக்காத வரையில் ...
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment