அரசியல் Vs அரசியல்

மனிதர்களை விலை பேசுவதற்காக நமது நாட்டின் அரசியல்வாதிகள் பல நூறு கோடி ரூபாய்களை இறைக்கத் தயாராய் இருக்கிறார்கள். அதே நேரத்தில், மற்றொரு புறம் கொத்துக் கொத்தாய் உணவுக்கும், உடைக்கும் இருப்பிடத்திற்கும் அல்லாடும் ஏழை மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிகிறார்கள். இன்றுவரையிலும், இந்த நாட்டின் தலைமை பெருந்தன்மையானவர்களிடம் இருந்ததில்லை. மாறாக பொதுவாழ்க்கையின் எச்சங்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மக்கள் விடியலுக்கான சரியான அரசியல் இன்னும் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை. இதையெல்லாம் நாம் குறிப்பிடுவது. ஆம், அரசியல் ஒரு சாக்கட எனும் நடுத்தர வர்கத்தின் மனநிலைக்கு ஒத்து ஊதுவதற்காக அல்ல. அந்த சாக்கடையைச் சுத்தம் செய்யாமல், மனித சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை சுட்டிக் காட்டுவதற்காக

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels