தலைமேல் கத்தியாய்
எதிர்காலம் இருப்பதாய்க்
கத்திக் கொண்டிருக்கிறேன்
மறியலுக்கு வாவெனக்
கூவி அழைக்கிறேன்
சபித்தபடி நீயோ
விலகி நடக்கிறாய்
இதயத்தின் கூக்குரல்
இறைச்சலாய்ப் படுகிறது
கேவலம் எனச் சொல்லி
கேலி பேசுகிறாய்
வார்த்தைகளின் ஆழம்
புரியாதபோது
ஆர்பாட்டங்களும்,
போராட்டங்களும்
கசக்கின்றன உனக்கு
மூன்றாவது சந்தின் மூளையில்
இன்று கட்டியிருக்கும்
தட்டியிலே
எந்தத் தலைவனின் படமுமில்லை
அவை அறிவித்து நிற்கின்றன
உனக்கான கோரிக்கையையும் ...
ஆளும் வர்கங்களின்
குண்டாந்தடிகளில்
பட்டுதெரிக்கும்
இரத்தத் துளிகள்
உரக்கப் பேசுகின்றன
உன் நல் வாழ்வுக்காகவும் ...
எதிர் வரிசையில் நின்று
நீஎக்காளமிட்டாலும்
தொழிலாளி வர்க்கத் தோழனே
நான் உனக்காகவும்
தியாகம் புரிகிறேன்
ஏனென்றால்
பசிமிகுந்து
ஒருபருக்கையும் இல்லாத போது
உன் குழந்தையும்
கண்ணீர் விட்டழுகும் ...
சிறப்பான கவிதை இன்றைக்கு தேவையான கவிதை வாழ்த்துகள் தோழர்
ReplyDelete