சே குவேரா ... உன் நினைவுகள் எழுதிய உறுதிமொழி
அன்புள்ள செ குவேரா,
இது உன் பிறந்தநாள்
மட்டுமல்ல.
ஏகாதிபத்தியத்தின்
நுகத்தடியில்
அடிமைப்பட்டுக் கிடந்த
தேசங்களின்
எழுச்சியின் துவக்கப் புள்ளி.

இதோ உனது பாதையில்
ஆயிரமாயிரமாய்
இளைஞர்கள் புறப்படுகிறோம்.

அந்த ஏகாதிபத்திய
நரிகளின்
கோரைப் பற்களை எதிர்த்து,
ஒரு தலைமுறையாய் ....

தலைமுறையாய் எழுவோம்.
எங்கள் தேசங்களின்
தலைவிதியாய் எழுதப்பட்ட
சோகங்களுக்கு எதிராக ...

பட்டினிகளின் மேல்
பட்டுக் கம்பளம் விரித்திருக்கும்
ஆட்சியாளர்களை வீழ்த்துவோம்

மீண்டும் ஏந்துவோம்
எங்கள் எதிர்காலத்திற்கான
முழக்கங்களை
ஊழல் மலிந்த
தேசங்களின் வரலாற்றை
இளைய கரங்கள் திருத்தி எழுதும் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels