தவறுதலாக வாயில் துப்பாக்கி!

சென்ற வாரத்தில் ஒரு செய்தி, "தவறுதலாக சிறுவனின் வாயில் துப்பாக்கி வைத்து சுட்ட போலீஸ்" என தலைப்பிட்டிருந்தார்கள். அதெப்படி? தவறுதலாக துப்பாக்கியை வாயில் வைப்பார்கள்?

உண்மையில், தவறு தலைப்பில்தான் இருக்கிறது. போலீஸ்காரனின் துப்பாக்கியென்பதால், கொலை முயற்சி வழக்கு 'விபத்தாக' மாற்றப்பட்டது. குழந்தை ஒரு ஏழை முஸ்லிம் குடும்பக் குழந்தை என்பதால், மனித உரிமைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

துப்பாக்கியையும், லத்திக்கம்பையும் வைத்து ஒரு உயர்ந்த சமூகத்தை படைக்க முடியும் என்பது - காட்டுமிராண்டிச் சிந்தனையாகும். இந்த சமூகம், ஒரு நாளும் வன்முறையால் 'பண்பட்டதில்லை'.

அதுவும் அவன் ஒரு ஏழைக் குழந்தை - அவனொரு முஸ்லிம் - அவனுக்கென்று ஆதரவுக்கு அரசியல் பின்புலமில்லை - அதனால் அவனொரு குற்றவாளி - அவன்மீது எந்த அராஜகத்தையும் நிகழ்த்தலாம் என்ற பார்வைதான் இந்த வன்முறைக்கு தூண்டுகோல் என்பது பட்டவர்த்தனம்.

ஆனால், மேற்கண்ட படி செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் இந்த தவறை மறைப்பதில் துணை போயின என்பதும் எதேச்சையானதல்ல.

இது மாற்றப்பட வேண்டியதும், கண்டிக்கப்படவேண்டியதுமான கூட்டணியாகும். #கண்டிக்கிறேன்

1 comment:

  1. சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து என்ன விளையாட்டு காட்டினார்களா.. நம் தேசங்களில் காவல் அதிகாரம் என்பது மக்களை காக்கவல்ல, மக்களின் கோபங்களில் இருந்து பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், மதவாதிகளையும் காக்கத்தானே. அவர்களுக்கு ஏழைகளின் வாயில் என்ன எந்த துவாரத்திலும் துப்பாக்கியை வைத்து விளையாட தயங்க மாட்டார்கள், ஈனப்பிறவிகள்.

    ReplyDelete

Labels