அன்பெனும் அடக்குமுறைக் கருவி ? (சாதி கொடுக்கும் விநோத விளக்கம்)

”தருமபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடிகள்” - என்று குறிப்பிட்டு ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. கலவரத்துக்குக் காரணமாக அமைந்தவர்கள் - மனித மாண்புகளை அறுத்த சாதி வெறியர்களா? அல்லது காதலா?சமூகத்தில் ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துதான் வருகின்றன. ஆனால், தருமபுரி சம்பவத்தில் - சாதி மாறிய திருமணத்தை செய்ததற்காக - ஒரு கிராமத்தையே அழித்து நிர்மூலமாக்கிய அநீதி வெளிப்பட்டது.மேற்கண்ட தலைப்பை பயன்படுத்திய பல செய்திகளும் - கலவரத்துக்கு காரணமான காட்டுமிராண்டித்தனத்தை குற்றம் சொல்லவில்லை. மாறாக, அந்தக் காதலர்கள் இதையெல்லாம் சிந்திக்காமல் திருமணம் செய்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறது.
---

சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.

விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.

அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---
சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.

விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.

அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார்.

பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.

நீதிபதி ‘இளவரசனைப் பிரிகிறீர்களா?’ என்று கேட்டதற்கு திவ்யா..’பிரியவில்லை. ஒரு மாத காலத்துக்கு தாயுடன் வாழ விரும்புகிறேன். ’’ என்று குறிப்பிட்டார். (தகவல்: செய்தியாளர் கவின்மலர்) ஆனால், உடனே அந்த காதலர்கள் பிரிந்துவிட்டதாக சிலர் பறைசாற்றி - காதலைச் சாடி எழுதத் தொடங்கிவிட்டனர். தந்தையை இழந்துள்ள அந்தத் தாயின் மீதான அன்பும், கணவனின் மீதான அன்பும் ஒரு பெண்ணை என்ன சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நாமறிவோம்.

ஆனால், சாதியை அல்லாது அன்பையே வன்முறைக் கருவியாகப் பார்க்கும் சில நபர்கள் இந்தப் பிரிவை பொதுத் தளத்தில் விவாதப் பொருளாக்கி மகிழ்ந்து குதிக்கிறார்கள். அவர்களின் அடிப்படை குறித்து ஆராயத் தேவையில்லை.

#காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !

4 comments:

  1. இப்படி நீட்டி முழக்குவதற்கு முன்பு, அவர்கள் உண்மையாகவே திருமணம் செய்து கொண்டார்களா? அதற்கான சட்டப்படியான தகுதி அந்தப் பையனுக்கு உண்டா என்று விசாரியுங்கள்.

    ReplyDelete
  2. தர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

    http://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-Love-Cheaters.html

    ReplyDelete
  3. தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!

    http://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-child-marriage-break-up.html

    ReplyDelete
  4. // #காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !//

    ஆமாம்! நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். வெளியில் தமிழ், தமிழன், பசுமை, முள்ளி வாய்க்கால், மனித உரிமை என்றெல்லாம் முழங்குவார்கள். உள்ளூரில் தமிழனுக்குள்ளேயே பேதம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளை எண்ணி நாம் தலை குனிந்து கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete

Labels