பலூனில் ஏறிப் பயணிக்கலாமா?


பலூனை ஊதி, காற்று வாயை அடைத்துப் பிடித்துக்கொண்டு, சட் டென விட்டால் பலூன் வீரிட்டுப் பறக்கும். சின்ன வயதில் எல்லோருமே இந்த விளையாட்டைச் செய்திருப்போம். அந்த பலூன் மீதி ஏறி பயணம் செய்ய முடிந்தால் ... எவ்வளவு நல்ல கற்பனை. இதைத்தான் சாத்தியமாக்கியிருக்கிறது விஞ்ஞானம்

பெட்ரோல், டீசல் வாகனங்களின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைகளுக்கு மாற்றாக மின் சக்தி, உயிரி எரிபொருள் ஆகிய தொழில் நுட்பங்களின் வரிசையில் காற்றழுத்த தொழில்நுட்பமும் இடம் பிடித்துள்ளது. ஆரம்பப் பாய்ச்சலிலேயே முந்திக்கொண்டு செல்கிறது என்றும் சொல்லலாம்.
தெற்கு பிரான்சைச் சேர்ந்த எம்டிஐ நிறுவத்ததினர் 10 ஆண்டுகளாகவே இதுகுறித்த ஆய்வுகளில் இறங்கிவந்தனர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதலே இவ்வகைக் கார்கள் குறித்து செய்திகள் வெளியாகின. இருப்பினும், இந்த ஆண்டுதான் இவ்வகைக் கார்கள் சந்தைக்கு வந்துள்ளன. இனிவரும் காலங்களில், சந்தையின் போக்கை மாற்றும் முக்கியத் தொழில்நுட்பமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக அவர்கள்  3 பேர் மற்றும் 5 பேரை ஏற்றிச்செல்லும் வகையிலான கார்கள், ஒரு டிரக் மற்றும் வேன் என 5 வகையான வாகனங்களை வடிவமைத்துள்ளனர். இதில் 3 பேர் செல்லும் வகையிலான கார் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எப்படி செயல்படுகிறது?

90m3 அளவு கம்ப்ரஸ் செயப்பட்ட காற்று அதற்கான பைபர் பலூன்களில்  சேமிக்கப்படுகிறது. இந்தக் காற்று அரை வெப்பநிலை பட்டவுடன் சூடாகி விரிவடையும். அவ்வாறு அழுத்ததுடன் வெளியாகும் காற்று விரிவடந்து இஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள பிஸ்டனை அழுத்துகிறது. காற்றுப்பையை சூடேற்ற தனியாக எந்த தொழில்நுட்பமும் தேவையில்லை. அழுத்தப்பட்ட பிஸ்டன் சுழன்று,கார் முன்னோக்கிச் செல்கிறது.

மின்சாரம், உயிரி எரிபொருள் என மாற்று எரிபொருள் திட்டங்களைக் காட்டிலும் எளிதான மாற்று எஞ்சின் தொழில்நுட்பம் எளிதானதாகும். இதில், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகவும் குறைவு. மேலும், இந்தவகை எஞ்சின்களில் காற்று அடைப்பதற்கான கருவிகளை, ஏற்கனவே உள்ள பங்குகளிலேயே நிறுவ முடியும். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை.

சிறப்பம்சங்கள்:

3 பேர் பயணம் செய்யும் வடிவில் அமைக்கப்பட்டுள்ள காற்றழுத்தக் காருக்கு, மினி கேட் (Mini C.A.T) என்று பெயரிட்டுள்ளனர். இதன் பாகங்கள் கணினி கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, ஓட்டுனரின் குரலுக்கு ஏற்ப கட்டுப்படுதல், இணையதள இணைப்பு, செல்போன் இணைப்பு, ஜிபிஎஸ் எனப்படும் இருப்பிடம் குறித்த தகவல்கள், ஓட்டுனரின் தன்மையைப் புரிந்து செயல்படுதல், அவசரகால அமைப்பு மற்றும் டிவி, பாடல் உள்ளிட்ட நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகமும் மைக்ரோ கண்ட்ரோலர்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், விளக்குகள் உட்பட அனைத்தையும் கணினி மூலமே இயக்கலாம்.

இந்தக் காரை திறக்க, சாவி போடத் தேவையில்லை. அதற்கான குறியீட்டெண் கொண்ட அடையாளத்தை பாக்கெட்டில் பொருத்திக் கொண்டால் போதும், நம்மை அடையாளம் கண்டு தானே திறந்துகொள்ளும். இவ்வாறு மென்பொருள் சார்ந்த இதன் வடிவமைப்பு புதிய தலைமுறையை அதிகம் ஈர்க்கும்.

10 மடங்கு குறைந்த செலவு:
எத்தனையோ காரணங்கள் இருப்ப்பினும், இவ்வகைக் கார்களை நடுத்தர மக்கள் தேர்ந்தெடுக்க, அதான் குறைந்த எரிபொருள் மற்றும் பராமறிப்புச் செலவே காரணமாக அமையும் என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள். இந்தக் காரில் பயணிக்க ,பெட்ரோலைக் காட்டிலும் 10 மடங்கு குறைந்த செலவே ஆகும். மின்சாரக் கார்களைக் காட்டிலும் இரண்டுமடங்கு அதிக மைலேஜ் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. 60 கிமீ வேகத்துக்கு உள்ளாக பயணிக்கும் 80 சதவீதம் வாடிக்கையாளர்கள் இந்தக் காரை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 100 ரூபாய்க்கு காற்றுப்பிடித்தால் 300 கிலோமீட்டர் பயணிக்கலாம். காற்றைத்தவிர, 50 ஆயிரக் கி.மீ பயணத்திற்கு ஒருமுறை உராய்வைத் தடுக்குப்பதர்கான எண்ணெய் மாற்ற வேண்டியிருக்கும். காற்றழுத்தமே எஞ்சினின் சூட்டை 0-15 டிகிரி அளவுக்கு குறைத்துவிடுவதால் குளிர்சாதனத்திற்கென தனியாக மின்சக்தி தேவைப்படாது.என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், எம்டிஐ நிறுவனத்தினர் இந்தக் காருக்கு உலகம் முழுவது கிடைத்துள்ள வரவேற்பினால் உற்சாகமடைந்துள்ளனர். 10 வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னர் ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். தற்போது, உலகில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் 50 கம்பெனிகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனஎன்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்குமா?:
ஒவ்வொருவருடமும் சுமார் 3 ஆயிரம் கார்களை தயாரிக்க எம்டிஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் காற்றழுத்தக் கார்கள் தயாரிப்பதற்கான உரிமத்தை டாடா குழுமத்தினர் பெற்றுள்ளனர். விலை குறைவானதாகவும், கையாள எளிதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாகவும் இருப்பதால், இந்தியச் சந்தைக்கு இவ்வகைக் கார்கள் ஏற்றதாக இருக்கும்என்று அவர்கள் கருதுகின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்கள் தயாரித்தால், கார்களை ரூ.2 லட்சத்திற்கு  சந்தையில் விட முடியும். இருப்பினும், இதன் உரிமத்தை தனியார் வைத்திருப்பதால், சந்தை விலை மேலும் கூடுதலாகலாம் என்பதுதான் வருத்தமளிக்கிறது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels