உன்னத அரசியலின் ஒரு துளி ... !

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரண்ட்லைன் கட்டுரைகள்  என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரையில், ”என் குடும்பத்தை விட மேலான இடத்தில் என் நாட்டு மக்களை வைப்பதை துவக்கத்த்தில் நான் தேர்வு செய்யவில்லை. ஆனால், நாட்டு மக்களுக்கு கடமையாற்ற முயலுகையில், ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு தந்தையாக, ஒரு கணவனாக கடமையாற்றுவதிலிருந்து தடுக்கப்படுவதைக் கண்டேன்....

லட்சோபலட்சம் தென்னாப்பிரிக்க மக்கலுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைக்காக நான் மிக நன்றாக அறிந்த நேசித்த என் குடும்ப மக்களின் வாழ்வைப் பலிகொடுக்க நேர்ந்தது. அது மிக எளிமையான விசயம்தான், இருந்தாலும் .... சிறு குழந்தை தன் தந்தையைக் கேட்கிறது “எங்களுடன் இருக்க உங்களால் ஏன் முடியாது?” அப்போது அந்த தந்தை வேதனை மிகுந்த அந்த சொற்களைக் கூறுகிறார், “உன்னைப் போலவே குழந்தைகள் இருக்கின்றன, ஏராளமான குழந்தைகள் ...”

படிக்கும்போது இப்படித்தான் தோன்றியது... மகத்தான மனிதர்கள் உறுவாக எத்தனை குடும்பங்களின் தியாகம் காரணமாய் அமைந்திருக்கிறது. தங்களின் சின்னச் சின்ன சந்தோசங்களைக் கொண்டு அவர்கள் மிகச்சிறந்த வருங்காலத்தை கட்டமைக்கிறார்கள். இன்றைக்கு அரசியலை தன் வழியாகத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள். அப்படியானதொரு லட்சிய வேட்கையை ஏந்திக்கொள்ள வேண்டும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels