சுதந்திர இந்திய வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி தில்லி யில் புதனன்றுநடைபெற்றது. ஆனால், எகிப்து, லிபியா ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செய்திகள் வெளியிட்டு சிலாகிக்கும் பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிடவே இல்லை.
இந்தியாவில் தலைநகரில் வேலைகொடு, உணவுகொடு என்ற கோரிக்கையுடன் லட்சக்கணக்கான பட்டினி மனிதர்கள் திரண்டு முழக்கமிட்டால் அது சும்மாவா? தொழிலாளிவர்க்கத்தின் குரல் வளையை உடைக்கும் விதமாக செய்தியை நீர்த்துப் போகச் செய்தும், படங்களை மட்டும் வெளியிட்டும் தேசிய பத்திரிக்கைகள் செய்திருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் அந்த பேரணியில் பிரம்மாண்டத்தை சர்வதேச ஊடகங்களின் புகைப்படங்களிலும் செய்திகளிலும் பார்க்கலாம்.
சொந்த நாட்டின் எழுச்சியை மறைக்கும் இந்த ஊடகங்களின் உள்நோக்கம் புரிபடுகிறது. பார்ப்போம், எத்தனை நாளைக்குநிலை இப்படித்தொடருமென்று.
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment