நேர்படப் பேசு - ஏன் ஒரு பக்க சார்பாகிறது?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப் படும் ஒன்றாக இருக்கும் விவாத நிகழ்ச்சி நேர்படப் பேசு. ஆனால் கடந்த சில தினங்களாக 'நாற்பதின் நாடித் துடிப்பு' என அவர்கள் மேற்கொள்ளும் கருத்துக் கணிப்புகள் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.

தேர்தலுக்கான களமே தயாராகாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் என்பதால் இப்பிரச்சனை இருக்கலாம் என்பது ஒரு பக்கம் இருக்க - மேற்கு மண்டம் குறித்த கணிப்புகள் வெளியானபோது மேலும் சில அபத்தங்கள் புரிபட்டன.
---

1) 'மேற்கு மண்டல மக்களால் அதிகம் விரும்பப் படும் அணியாக பாஜக அணி உள்ளது. ஆனால், அந்த அணியின் தலைவர் பிரதமராக மாட்டார்' என்ற கணிப்பு முடிவைப் பார்த்து அந்த விவாத அரங்கமே வியந்தது.

2) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் வந்த முடிவுகளை கணிப்பு நடத்திய நிறுவனம் மட்டுமே நம்பியது.

3) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு சாதியக் கட்சி அல்ல என்றும் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் வாக்குகள் தங்களிடம் இருப்பதாகவும் ஈஸ்வரன் தனது பிரச்சாரத்தை நடத்திக் கொண்டபோது பத்திரிக்கையாளர் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். (அவர்கள் மாநாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் போடப்பட்டது குறித்தும். சென்ற தேர்தலில் திமுகவுடன் அணி அமைத்தும் கொமும வெற்றி பெற முடியாதது குறித்தும் யாரும் சுட்டிக்காட்டவில்லை.)

4) அதே போல அந்தந்த மண்டலங்களில் வசிக்கும் - அரசியல் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் தேர்வும் இல்லை.

5) இப்போதுள்ள எம்பி-யை மீண்டும் தேர்ந்தெடுப்பீர்களா என்ற கேள்விக்கு தொகுதி வாரியாகத்தான் பதில் கண்டரிய முடியும். (உதாரணமாக திருப்பூர் எம்.பி சிவசாமி அதிமுக கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஈரோடு மதிமுக எம்பி தற்போது அவர் இருந்த அணியில் இல்லை.) ஆனால் மண்டலம் முழுமைக்கும் ஒரே முடிவை வைத்துக் கொண்டிருந்தனர்.

6) பாஜகவுக்கு கோவை, திருப்பூரில் கட்சி உள்ளது. ஆனால் மண்டலம் முழுமைக்கும் 40 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு உள்ளதாகவும், ஆனால் வெற்றிபெறப் போவது அதிமுக என்றும் குழப்பமான முடிவுகள் முன்வைக்கப்பட்டன.

7) இவை எல்லாவற்றிற்கும் கருத்துக் கணிப்பை அறிவியல் பூர்வமாக நடத்தியதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவனத்தின் தலைவர் - 'வலுவான மத்திய அரசு' வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நேரடியாக பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றி பேசிக் கொண்டிருந்தார்.

Gunaa Gunasekaran உள்ளிட்டு, மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு திமுகவுக்கு என்னதான் சரிவு ஏற்பட்டாலும், அது பாஜகவின் வாக்கு வங்கியாக மாறாது என்ற உண்மை தெரியும்.

கணிப்பு நடத்தியவர்கள் ஒரு நோக்கத்தோடு செய்ததால்தான், அது உண்மையை நெருங்கவில்லை என்றே தோன்றுகிறது. To: PuthiyaThalaimurai TV

5 comments:

  1. இந்திய மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கொள்கைகள் அடிப்படியில் கூட்டணிகள் உருவான காலம் போயே விட்டது.

    இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரச்சினையே ஹீரோ வொர்ஷிப் தான். அதிலும் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதால் தமிழகம் மிகவும் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. பொதுக்குழு, செயற்குழு என்பது எந்தக் கட்சியிலும் இல்லை.

    இந்தியாவில் மனிதர்கள் எல்லோரும் (வாக்காளர்கள் உட்பட) சந்தையில் விற்பனைப் பொருட்கள் போல் விலை பேசப் படுகிறார்கள். விலையைப் பொறுத்து பாராளுமன்றம் உருவாகும். அதுவரை கருத்துக் கணிப்புகளே நாடகம்தான்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. கட்சிகள்தான் விலைபோகின்றன. மக்கள் விலைபோவதாகச் சொல்வது, நம் மக்களை அவமானப்படுத்துவதாகும்

      Delete
    2. திருமங்கலம் பார்முலா.. என்று சொல்லப்படும் ஓட்டுக்கு பணம் வாங்குவது நடக்கிறதா இல்லையா? அப்படி இருக்க, விலை போவதாகத்தானே அர்த்தம்..

      Delete
  2. இடைத்தேர்தல்களின் நிலை வேறு ...

    ஜனநாயகத்தை விரும்பும் மக்கள்தான் நம்மவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் விலை என்று சொன்னதில் விலையில்லாப் (இலவச)பொருட்களும், சாதி, மதங்கள் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதும் அடங்கும்.

      ந்ன்றி,

      கோபாலன்

      Delete

Labels