விண்ணில் பறந்தன 100 கோடிக் கனவுகள் ...

100 கோடி மக்களின் கனவுகளையும் உயரத்தில் எடுத்துச் சென்றிருக்கிறது அந்த விண்கலம். 2 முறை தோல்வி கண்ட அந்த விஞ்ஞானிகள், இந்தமுறை ஜெயித்தே விட்டார்கள்.

இந்த நிமிடத்தில் நமக்கு சலிப்பும் தோன்றாமலில்லை. எத்தனை சாதனைகளை செய்தாலும் என்ன? - செயற்கைக் கோள்களின் வழியாக பரவும் கருத்துகளில், மானுடத்தின் மாண்புகளை உயர்த்துவது சிறுபான்மைதானே!

செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தால் கிடைக்கும் வசதிகளை - ஏகபோகமாக விற்று காசாக்குவது தனியார் பெரும் நிறுவனங்கள்தானே? இத்தனை வளர்ச்சியை சதித்தாலும் - நம் சாமானியக் குழந்தைகள் பட்டினில் தவிக்கத்தானே போகிறார்கள்?

கேள்விகள் நியாயமானவை. ஆனால் நிதானமாக சிந்தித்தால் அது உண்மையில்லை. தனது எல்லைகளை விரிவுசெய்து, கனவுகளை விசாலமாக்கிக் கொண்டே போவது மனித இயல்பு. இதுதான் எல்லையென்று திருப்திப்படாமல், புதிய மகரந்தங்களை நாடிச் செய்வதுதான் சிந்தனை என்னும் பட்டாம்பூச்சி.

மனித சக்தியின் அளவை அவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

இந்தச் சாதனைகளின் பலன்களை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது - ‘சமூக விஞ்ஞானத்தின்’ வேலையாகும். விஞ்ஞானத்தின் ஒரு பிரிவில் ஏற்பட்டிருக்கும் தொய்வுக்காக, மற்றொரு பிரிவை நாம் ஆதரிக்காமல் இருக்க முடியுமா?

யாவரும் சமமென்ற கனவின் கருவை, சிந்தனையின் விண்கலத்தின் ஏற்றி விடுவோம், உலகிற்கு அதுவொருநாள் புத்தொளியூட்டும்.

happy #gslv day 

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels