திமுகவினரின் 'நம்பிக்கை' ...

திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரியின் பேட்டியும், அதைத்தொடர்ந்து நடக்கும் உட்கட்சிப் பூசல்களும் மையமான செய்தியாகின்றன.

அழகிரியின் பேட்டியை உற்று கவனித்தால் அவரிடம் எந்த அரசியல் லட்சியமும் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரியும். அவரைப் போன்றவர்கள், திமுக தலைவரின் மகன் என்பதாலேயே அதிகார மையங்களாக உருவெடுத்தது, ஏதோ கட்சித் தலைவரின் பலவீனம் மட்டுமல்ல.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் சமூக சீர்திருத்த விருப்பம் கொண்டிருந்த பகுத்தறிவாளர்களின் உறுதியான ஆதரவை திமுக பெற்றிருந்தது. ஆனால், அந்தத் தளம் சிதைவைச் சந்தித்துவருகிறது. இதுவெல்லாம் ஏதோ சில நாட்களில், சில ஆண்டுகளில் நடைபெற்றவை அல்ல.

எந்த ஒரு அரசியல் இயக்கமும், லட்சக்கணக்கானோரின் லட்சியங்களுக்கு, உயிர் வடிவம் கொடுத்தே உயர்ந்தோங்குகிறது. அப்படித்தான் திமுகவும் தன் வெற்றிகளைப் பரித்தது. இப்போது, அப்படிப்பட்ட முழக்கங்கள் அவர்களிடம் மிச்சமிருக்கிறதா? அந்தக் கனலை அணையாமல் காக்கிறார்களா? என்பது மையமான கேள்வி.

இப்போது ஏற்பட்டுவரும் சரிவிலிருந்தும், அரசியல் ராஜ தந்திரத்தால் இயக்கத்தின் தலைவர்கள் திமுகவை மீட்டு எடுப்பார்கள் என்று அதன் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பட்டும்.

ஒன்று நிச்சயம் ... வெற்று நம்பிக்கைகள், பகுத்தறிவல்ல.

1 comment:

  1. யா காவாராயினும் நா காக்க

    அண்ணன் அழகிரி சில வருடம் முன்பு ஒரு பேட்டியில் விஜயகாந்த் ஒரு காற்றுப் போன பலூன் என்றார்.

    காலம்தான் எப்படி மாறுகிறது.

    கே. கோபாலன்

    ReplyDelete

Labels