இன்னுமொரு ஆபத்து காத்திருக்கிறது ...

மதவெறியைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய்வது இந்தியாவிற்கு புதிதில்லை என்றாலும் - அது திட்டமிட்ட அடிப்படையில் நடந்துவருவதும், இவ்விசயத்தில் முக்கிய கட்சிகள் கடைப்பிடிக்கும் சந்தர்ப்பவாத மெளனமும் - சிக்கலான போக்கை உணர்த்துகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் - பத்திரிகையாளர் சந்திப்பொன்றை அர்ஜுன் சம்பத் நடத்தினார். அதில் கோவை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங் களில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இஸ்லாமியினரால் பாதிக்கப்படுவ தாக கூறினார். செல்வபுரம், கல்லாமேடு, சுந்தராபுரம், குனியமுத்தூர், புலியகுளம், இருகூர் என பல இடங்கள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன.

பத்திரிக்கையாளர் சந்திப்போடு மட்டும் அது நிற்கவில்லை. சிறு அளவிலான தகறாருகளைக் கூட - வளர்த்தியெடுத்து அதனை வைத்து சமூகப் பதட்டத்துக்கு விதை போடுவதற்கான முன்னெடுப்பும் அதில் இருந்தது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும், நாட்டில் எங்கெல்லாம் இந்து மதவெறி பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் - ஏதாவதொரு மோதல் நடந்திருப்பதும், பதட்டம் உருவாக்கப்படுவதும் தற்செயலானதல்ல.

இந்து மதத்தின் பெயரால் வெறியைக் கிளப்பும் நடவடிக்கைகளும் - அதற்கு எதிர்வினை என்ற பெயரில் - மோதலுக்கு தீனி போடும் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் நடவடிக்கைகளும் அமைந்தன.

சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவேண்டிய அடிப்படைவாதிகளிடையே நடக்கும் மோதலை - சமூகத்தின் மையத்திற்கு இழுத்து வரும் போக்கு தொடங்கியது. மதவெறி அமைப்புகளின் அரசியல் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துவிட்டதால் - பொதுமக்களிடம் அச்சம் நிலவிய அளவுக்கு, ஆதரவு நிலவவில்லை.

இதுபோன்ற சூழலில் - அரசு நிர்வாகம் அனைத்துக் கட்சி குழுக்களை அமைத்து அமைதியைக் காக்கவும் - மதவெறியர்களை தனிமைப்படுத்த வழிகான வேண்டும். அதற்கு பதிலாக - மதவெறி அமைப்புகளையே அழைத்து - அமைதியைக் குறித்த விவாதத்தை நடத்தியது காவல்துறை. அரசு நிர்வாகத்தின் இந்த போக்கு தொடர்ந்தால் - அப்பாவிகள் பிணத்தின் மீதான அரசியல் மீண்டுமொருமுறை தலை தூக்க வாய்ப்பிருக்கிறது.

#மதவெறி நிகழ்ச்சிநிரலும், உலகமய ஆபத்தும் நமது தலைக்கு மேல் சதுரங்கத்தை நடத்துகின்றன. - அன்புசூழ்ந்த வாழ்க்கையையும், வளர்ச்சியையும் விரும்புபவர்கள் - இவற்றிற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். பேசவேண்டிய சூழலில், அமைதிகாப்பதும் ஆபத்துத்தான் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels