ராகுல் - முத்தம் - ஒரு படுகொலை ...

ராகுலுக்கு முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை ...

சக மனிதனுக்கு முத்தம் கொடுப்பதால் 'கற்பு' ஒழுக்கம் மீறப்படுவதாகக் கருதும் அந்தக் கணவன் - இனி அந்தக் கரிக்கட்டையோடு மட்டுமே படுத்து தன் கற்பொழுக்கத்தைப் பராமரிப்பான் எனில் - தானும் ஒருமுறை தீக்குளித்து, தன் உதடுகளின் தூய்மையை நிரூபிப்பான் எனில் - இந்த சம்பவத்தை நாம் மன்னித்துவிடலாம்.

ஆனால், அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் என்ன செய்ய வேண்டுமென தீர்மானிப்பதற்கான உரிமை, சரியானதைச் செய்வதற்கு மட்டுமல்ல - தவறிழைத்தும் கற்றுக் கொள்வதற்கான உரிமை தரப்படாத சமூகம் - திறந்த வெளிச் சிறையாகவே இருக்கும்.

சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்படாமல், ஜனநாயகத்தின் பெருமையைப் பீற்றுவதில், பொருளேதுமில்லை.

1 comment:

  1. கொல்லப் பட்டது முத்தமிட்ட பெண் அல்ல என்கிறது காவல் துறை ,உண்மை வராமலாப் போய்விடும் ?

    ReplyDelete

Labels