To: மாணவர்கள், தமிழ்நாடு.


களம் கொதித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி உருவாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் சில கவர்ச்சி அறிவிப்புக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

களத்தில் நிற்கும் பலரும் இலங்கை மக்களுடனான மனித நேய உறவுகளை முன் நிறுத்தியே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல் சாயலையும் நீங்கள் விரும்புவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நல்லது, நமது கட்சிகள் பலவும் கம்பெனிகள் போல மாறி, தலைவன் என்ற பிம்பத்தில் கட்டுண்டுதான் கிடக்கின்றன. ஆனால், நீங்கள் அரசியலற்றவர்களாக தொடரக் கூடாது.

இதுவொரு காலம் தாழ்ந்த போராட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசுக்கும் - மக்களும் பிரதான அக்கறைகள் வேறு வேறு என்ற நிலை தொடரும் வரை - நாம் போராட வேண்டிய தேவை இருப்பதால் - இந்தத் தாமதம் ஒன்றும் தவறல்ல.

அமெரிக்காவின் தீர்மானத்தில் எமக்கு உடன்பாடில்லை. அவனே ஒரு பெரும் கொலைகாரன் என்பதால் - அவர்களின் தீர்மானம் நீர்த்துக் கிடப்பதில் ஆச்சர்யமும் இல்லை. இன்றைய உலகம், அதிகாரப் போட்டிக்காகவே இப்பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது. உலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அளவு - மனிதநேய சக்திகளின் ஒற்றுமை உருவானதாகத் தெரியவில்லை.

ஏராளமான தோற்கடிக்கப்பட்ட போராட்டங்களை உலகம் கண்டிருக்கிறது. - ஆனால், மனிதர்கள் வாழும் மட்டும், மனித நேயம் வெல்லும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

உங்கள் எல்லைக்கு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளை - தொடர்ந்து முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது. ஒவ்வொரு கிராமங்களிலும், சேரி என்றொரு அகதி நிலை தொடருவதற்கு முற்றுப் புள்ளி வைப்பது.


இதுபோக ஏராளம் விசயங்கள் போராடுவதற்கு இருந்தாலும், தொப்புள் கொடி உறவுகளின் மீதான நேசம் என்ற அளவிலிருந்தே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.

#சம நீதிக்கான மெய்யான உள்ளக்கிடக்கை உங்களுக்கு இருந்தால் - என் கோரிக்கையில் நெருடல் இருக்காது என்ற நம்பிக்கையுடன்.

- இரா.சிந்தன்

3 comments:

  1. தமிழ்சமூகம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் தமிழ்த்தேசியம் அமைப்போம்

    ReplyDelete
  2. தமிழ்த் தேசியம் என்பது ஒரு இலக்கே அல்ல. மக்கள் - மக்கள் விரோத அரசுகள் என்ற பிரிவினை இருக்கும் வரைக்கும். பசியால் செத்து விழும் ஒவ்வொரு குழந்தையும் தமிழனின் குழந்தைதான் ... தமிழர் - உலக விடுதலைக்கு முன்னோடியாக அமைவார்களேயன்றி. தன்னளவில் ஒரு கூடு கட்டும் சுயநலமிகளாக ஒருபோதும் இருப்பதற்கில்லை.

    ReplyDelete
  3. சிந்தன் ,
    உங்கள் பின்னூட்டம் மிக சுவையான இனிப்பு ,உங்கள் படைப்பை விட. இது தான் நான் உண்மையான எளிய தமிழனிடம் எதிர் நோக்குவது ,மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Labels