சினந்து எழு! - (மக்கள் நேசக் கவிதை) - இரா.சிந்தன்

அந்நிய ஓநாய்கள் பசியோடிருக்கின்றன
அழைத்து வருகிறான் கொள்ளைக்காரன் 
வீட்டுக் காவலுக்கு!

அறுவை சிகிச்சை என்று சொல்லியே
அடி வயிற்றில் செருகுகிறான் கத்தியை ...
கொப்பளிக்கும் குருதியை
குடித்தே பசியாருகின்றன ஓநாய்கள்

"உன் சதையைத் தொடவில்லை பார்த்தாயா?
அவைகளுக்கும் நன்றியிருக்கிறது"
விளக்கத்தை விளங்கிக் கொள்வதற்குள்
நக்கத் தொடங்குகின்றன

கண்ணீரைக் கண்டு
கவிதை எழுதுகிறான் 'கருணை' மகான்
"நீ அழக்கூடாது ...
அவைகளும் அழக் கூடாது ..."

சீர்திருத்தங்களின் பெயரால்
சிரம் அறுக்கப்படுகிறது
ஓடி ஒளிகிறார் சிலர் ...
"கொடூரக் கொலை ...
நல்ல வேளை ... நாங்கள் பார்க்கவில்லை"

கதவு திறந்து கிடக்கிறது
காவலர்கள் பல் இளிக்கிறார்கள்
பசித்த ஓநாய்கள் பாய்கின்றன ...

எழுந்து நிற்கிறாள் இந்திய தேவி ...
சினம் கொப்பளிக்க ...

அவள் முகம் இரத்தச் "சிவப்பு"!

நன்றி: தீக்கதிர் (7.12.12)

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels