தொடரும் சோகம்: 65 நாட்களில் 85 பேர் தற்கொலை !

இரா.சிந்தன் 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதலான கடைசி 65 நாட்களில் 85 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாட்டிற்கு பெருமளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய நகரில் இவ்வாறு தொடர் தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன? 
 
திருப்பூரில் சராசரியாக மாதம் 40 முதல் 50 பேர் வரை தற்கொலை செய்துகொள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அரசு நிர்வாகத்தினர் தற்கொலைத் தடுப்புக்குழு ஒன்றை அமைத்தனர். அவசர அவசரமாக அமைக்கப்பட்ட அந்தக் குழுவின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கவனமாக தவிர்க்கப்பட்டனர். இதுபற்றி பத்திரிக்கைகளில் விளம்பரமாக செய்திதான் வெளியானது. ஆனால் தற்கொலைகள் குறைந்தபாடில்லை.
 
காவல் துறை குறிப்பின் படி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் (பதிவுகள் கிடைக்காத 9 நாட்கள் தவிர) 65 நாட்களில் 85 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அதா வது ஒரு நாளில் ஒன்றுக்கும் அதிக மான தற்கொலைகள் நடந்துள்ளன. பெரும்பாலும் திருப்பூர் மாநகரம் மற்றும் நகரம் சார்ந்த நல்லூர், அவினாசி, பெருமாநல்லூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் 3 இல் சுமார் 2 பங்கு (58) தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. கிராமப்புறங்களில் 27 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நகரப்பகுதி களில் அதிகமான தற்கொலைகள் மாந கரத்திற்கு உள்ளேயும், கிராமங்களி லேயே மிக அதிகமாக உடுமலை சுற்று வட்டாரம் மற்றும் மடத்துக்குளம் பகுதி களிலும் நடந்துள்ளன.

ஆண்கள் அதிகம்:
ஆண்களே மிக அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் அந்த விபரங்களில் தெரிய வருகிறது. ஆண்கள் 50 பேரும், பெண்கள் 35 பேரும் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இருபாலரிலும் இளம் வயதில் (18 - 45 வயதிற்குள் 58 பேர்) தற்கொலை அதிகமாக நடைபெறு கிறது. முதுமை நெருங்க நெருங்க ஆண்கள் தற்கொலை அதிகரிக்கிறது. 
 
இக்காலகட்டத்தில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமி யரும் 6 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளனர். இதற்கு பள்ளிப்படிப்பின் மீதான பயமும், மாதவிடாய் மீதான குழப்பமும் காரணங்களாக இருந்துள் ளது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மையே பிரதான காரணம்:

தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, வேலையின்மையும், அதனால் வாங்கும் சக்தி குறைந்ததும் பிரதான காரணமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தீராத வியாதியால் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும், குடும்ப சண்டைகளால் ஏற்படும் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்துவட்டிக் கொடுமையும் கணிசமான பகுதி யினரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. 
சமூக காரணங்களான, கலாச்சார சீர்கேடு, காதல் திருமணத்தை அங்கீக ரிக்காதது, முதுமையில் தனிமை ஆகிய காரணங்களும் குறிப்பிடத்தக்கவை. காவல் துறையினர் குறிப்புகளில் வயிற்று வலியை மையப்படுத்தியே பெரும்பாலான தற்கொலைகள் பார்க்கப்பட்டுள்ளன. இதை கவனிக்கையில் சட்டத்திற்கு தகுந்தார் போல வழக்குகள் திரிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் எழு கிறது.

தேவை உடனடி கவனம்:
தற்கொலைகளைத் தடுக்க முடியாதா? என்ற கேள்விகளுடன் நாம் மருத் துவர்களை அணுகியபோது, “திருப்பூரில் நிலையான வேலை, ஆரோக்கியமான பொழுதுபோக்கு, அமைதி யான வாழ்க்கை ஆகிய மூன்றும் கேள் விக்குறியாகியுள்ளன. இதனால் வாழ்க் கை மீதான பிடிப்பும், நம்பிக்கையும் இழக்கும் தொழிலாளர்கள் இப்படியாக தற்கொலை எண்ணங்களில் சிக்குகின் றனர். தற்கொலைக்கான காரணங் களை அகற்றுவதே அதற்கான சரியான தீர்வாக அமையும் என்றனர். 
 
சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தியிடம் கேட்டபோது, “ அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் தொழிலாளர்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. அதே சமயம் விலை வாசி கடுமையாக அதிகரித்துள்ளது. சட் டப்படியான சலுகைகள் அமலாவதில் லை, வேலைக்கலாச்சாரம், சமூகப் பாது காப்பு ஆகியவை இல்லை. எனவே தொழிலுக்கு எந்த விதமான நெருக்கடி வந்தாலும் தொழிலாளர்களே நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர் கள் எளிதில் விரக்தி மனப்பான்மைக்கு ஆளாகின்றனர்.என்றார்.
”இது திருப்பூர் நகரத்தில் உள்ள நிலைமை மட்டுமல்ல. இதைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்திலுள்ள செம்மாண்ட பட்டி கிராமத்தில் நெசவுத்தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் வேலை யில்லாததால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி பத்திரிகையில் வெளியானது. வயதான தந்தை, தாய் மற்றும் மருமகள், எட்டுவயது பேரன், 2 வயது பேத்தி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் இத்தகைய அவல நிலைமையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய நிலைமை திடீரென்று ஒரு நாளில் உருவாகிவிட வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக அகில இந் திய அளவில் மத்திய அரசு கடைப் பிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் மக்களை தற்கொலை யை நோக்கி தள்ளுகிறது.
- ஜி.ராமகிருஷ்ணன். மாநிலச் செயலாளர் சி.பி.ஐ. (எம்)
 மரணங்களின் கதறல், ஆளும் வர்கத்தின் காதுகளை எட்டுமா?

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels