விக்கிலீக்ஸ் - நிகழ்காலத்தின் ரகசியங்கள் ...

விக்கி லீக்ஸ் வழியாக வெளிவந்திருக்கும் அமெரிக்காவின் ஆவண ரகசியங்கள் - உலகில் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

விக்கி லீக்ஸ் என்ன செய்கிறது? - 800க்கும் அதிகமான செய்தியாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள் இணைந்து தொடங்கப்பட்ட அந்த அமைப்பு - கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு எந்த நாட்டிலிருந்தும், யார் வேண்டுமானாலும் ஆவணங்களைக் கொட்டுக்கலாம்.

2010 ஆம் ஆண்டு - அமெரிக்காவின் முக்கிய தகவல்தொடர்புகள் வெளியான போதுதான் இந்தத் தளம் உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

இப்படி வெளியான செய்திகளில் - ஈராக்கில் செய்தியாளர்களை குறிவைத்து கொலை செய்த அமெரிக்க ராணுவம். குவாண்டனாமோ சிறையின் மனித உரிமை மீறல்கள் - ஆப்கன் போர், ஈராக் போர் குறித்த ஏராளம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகின.

சீனாவில் - தியான்மென் சதுக்கத்தில் மாணவர்களை சீன அரசு கொத்துக் கொத்தாக கொலை செய்ததாக ஒரு செய்தியை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பியதாக - அமெரிக்க தூதர் தனது அரசுக்கு எழுதிய கடிதமும் அதில் கிடைத்தது.

இப்போது, இந்தியாவின் உள்விவகாரங்கள் - இந்தியாவின் முன்னால் பிரதமர் பற்றிய தகவல்கள். இந்தியாவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் என ஏராளமான தகவல்களைச் செய்தியாகப் படிக்கிறோம். - நமது ஆட்சியாளர்களைக் குறித்த பல தகவல்கள் தெரிய வருகின்றன. அதிர்ச்சியாக இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டர் வந்து வாழ்த்தியதும். அமெரிக்கத் தூதர்கள் மமதாவையும், மன்மோகனையும் அடிக்கடி சந்திப்பதும் ... என்ன காரணங்களுக்காகவென்பது - ’விசன் 2023’ ஆவணத்தையும், அன்னிய மூலதன அனுமதியையும், 123 அணுசக்தி ஒப்பந்த சரத்துக்களையும் கவனித்தால் தெரியும்.

ஆப்கானிஸ்தானில் - அமெரிக்கா நடத்திய படுகொலைகள் குறித்த ரகசியங்களை தொகுத்துக் கொண்டிருப்பதாகவும் - விரைவில் வெளியிடப்படும் என்றும் விக்கி லீக்ஸ் தெரிவிக்கிறது.

இந்த தகவல்கள் - விக்கி லீக்ஸ் மூலம் கசியாவிட்டால் - நம்மில் பலருக்கும் எதுவுமே தெரிந்திருக்காது உண்மைதான். ஆனால், இத்தனை ஆவணங்களையும் அமெரிக்கா எதற்காக திரட்டியது?? - இவற்றை வைத்துக் கொண்டு செய்த அரசியல் என்ன?

#கடந்த காலத்தில் செய்யப்பட்ட சதியாட்டங்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலத்தின் ரகசியங்களை அது உணர்த்துகிறது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels