விஸ்வரூபத்தின் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் ...

இந்தியாவிலிருந்­து, ஆப்கன் செல்லும் ஒரு உளவு அதிகாரி - அமெரிக்காவுக்கு­ சில தகவல்களைக் கொடுப்பதன் மூலம், பயங்கரவாதிகளை அழிக்கிறார். இரட்டை கோபுரம் இடித்த தீவிரவாதிகள் ஆப்கனில் இருந்தபோது - அவர்களை ஈராக் நாட்டில் தேடிக் கொண்டிருக்கும் அளவில்தான் அமெரிக்கர்கள் இருந்தார்கள் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

பெட்ரோல் கிணறுகளைக் மோப்பம் பிடிக்கும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்படி தவறான துப்புக்களை நம்பியதால்  பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்ய விரும்பாத அமெரிக்க ராணுவத்தின் குண்டுகளுக்கு லட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொலை செய்த பாவம் வந்து சேர்ந்து விட்டது.
-
தொடர்ந்து அமெரிக்காவுக்கு­ செல்லும் ”விஸ்” (கமல்), அணுகுண்டு சதியை முறியடிக்கிறார்­. - அவரின் திறமைக்கு முன் என்.ஒய்.பி.டி, எப்.பி.ஐ போன்ற சிறு சிறு நிறுவனங்கள் திணறிப் போகிறார்கள் ...

இந்த திறமைக்கு ஒரே உந்து சக்தியாக இருப்பவர் - இந்திய பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் இந்து மதவெறி, முஸ்லிம் மதவெறி, இனவாத, பிராந்தியவாத அரசியலை ஒன்றும் செய்ய முடியாதவர். அமெரிக்காவுக்கு­ மிகத் திறமையான உளவு அதிகாரியை அனுப்பி வைத்ததே இந்தக் கதைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.


மன்மோகனை விட விசுவாசமாக விஸ் உழைக்கிறாரே ஏன்? என்பதை இரண்டாம் பாகத்தில்தான் சொல்லப்போகிறார்கள்.

#எப்போதும் தங்கள் அடிமை தேசங்களை அண்டித்தான் - பிழைக்க வேண்டும் என விஸ்வரூபம் பார்த்தாவது உணர்ந்துகொள்ளட்­டும் அமெரிக்கர்கள்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels