வெசனம்!

முதலில் - தாத்தாக்கள் பெற்று வைத்திருந்த ஏராளம் கதை மாந்தர்களும் பிறகு தாத்தாவும் மரணமடைந்தார். “நல்ல சாவு” என்றார்கள் - மரணத்தின் வலியை அறிந்திடாத குழந்தைகளும் கேவிக் கேவி அழுகிறார்கள் ...

குளக்கரையில் தனியே தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளுக்கு தண்ணீர் செத்துப்போனது தெரியும், “கெட்ட சாவு” ஆறேழு ஆடிகளை தனிமையில் தாண்டிக் கொண்டிருக்கிறது ...

பாப்பா கட்டிய காகிதக் கப்பல் காற்றிலும் பறக்கும் - காகிதம் செத்துக் கொண்டிருப்பது - நல்லதா? கெட்டதா?

ஊர் மத்தியில் அமைந்திருந்த டூரிங் டாக்கீஸ் - அத்தை கல்யாணத்துக்கு காரணமாய் அமைந்தது. அட்டக் கருப்பு மாமாவை, எப்படித்தான் காதலித்தாரோ ??? இப்போது மல்டி பிளக்ஸ் சினிமாக்கள் - காதலர்களுக்கு அவ்வளவு நெருக்கமாயில்லை ...

சினிமா ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். - உயிர்த் தலைவர்களுக்காக மறியலெல்லாம் நடக்கிறது. ஊர் விட்டு ஊர் தேடிப் போகிறார்கள் - கதை மாந்தர்களுக்காக.

எல்லா கிராமங்களிலும் மத்தியில் ஒரு நூலகம் அமைந்திருக்கிறது. திறக்கப்படாத பூட்டுக்குள் ஜீவ சமாதியடைந்திருக்கிறது கருத்து சுதந்திரம்!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels