வங்கிகளைப் பாதுகாக்கும் யுத்தம் ...


இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுருத்தலாக எழுந்துள்ள பிரச்சனைகளில் முக்கியமானது ‘வராக்கடன்’. வங்கிகளில் முதலீடு செய்யப்படும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை ‘NPA’ என ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதனடிப்படையில், பல வங்கிகளில் இந்த ‘NPA’ அளவு அதிகரித்துவிட்டது. இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் அமெரிக்க வங்கிகள் சந்தித்த நெருக்கடியைப் போன்றதொரு நெருக்கடியை இந்தியா சந்திக்க நேரிடும்.

பொதுவாக கல்விக்கடன் பெற்றுள்ள மாணவர்களின் பெயர்களை வங்கிகள் வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தும். ஒட்டுமொத்தமாக இதுவரை தரப்பட்டுள்ள கல்விக்கடன் 55 ஆயிரம் கோடி. வேலை கிடைத்த பெரும்பாலான மாணவர்கள் கல்விக்கடனை திரும்ப செலுத்தி வருகின்றனர். சிறு நிறுவனங்களுக்கோ பெரும்பாலும் கடன் மறுக்கப்படுகிறது.

ஆனால், சொத்து படைத்த பெரும் நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கித்தொகை ஒட்டுமொத்த கல்விக்கடனைப் போல 10 மடங்கு என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. இதை வெளியிட்டது வங்கி நிர்வாகங்கள் அல்ல. தலைக்கு மேல் வெள்ளம் போனால் மூழ்குவது நாம்தான் என்பதை உணர்ந்த வங்கி ஊழியர்கள்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளையும், ஐஸ்லாந்து என்ற ஒட்டுமொத்த நாட்டையும் திவாலாக்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியவை ‘தேசியமயமாக்கப்பட்ட’ வங்கிகள்தான். இப்போது வங்கிகள் பாதிக்கப்படின், முழ்கப்போவது நாமும்தான்.

இதில் முதலிடத்தில் உள்ள 406 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அவர்கள், அந்த நிறுவனங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர். பிரபலமான ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ தொடங்கி, மருத்துவக் கல்லூரி வரையில் ஆயிரம் கோடிகளில் பாக்கி வைத்துள்ளனர்.

தங்கள் சொந்தப் பிரச்சனைகளையே பெரிதாகக் கருதிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பகுதி வங்கி ஊழியர்களும் அடங்குவர். அவர்கள் மத்தியிலிருந்து, தேசம் காப்பதற்கான குரல் எழுந்துள்ளது வரவேற்புக்குறியது.

நமக்கான போராட்டத்தை நாம்தான் நடத்த வேண்டும்.

1 comment:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete

Labels