2014 தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் ...

பி.சாய்நாத், இந்தியாவின் ஊரகப் பகுதிகள் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிக்கையாளர். அவரது சமீபத்திய கட்டுரை "பல அலைகளும், ஊடக சுனாமியும் "-யை தமிழில் கொடுத்துள்ளேன்.

புதுதில்லியின் ஊடக கல்விக்கான மையத்தின் சிஎம்எஸ் – ஊடக ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஒரு விசயம் தெரிய வந்தது. 5 முக்கிய தொலைக்காட்சி சானல்களின் முக்கிய நேரச் செய்திகளில் பிரதமரின் செய்திகளை விட 3 மடங்கு அதிகமாக மோடி காட்டப்பட்டார். அதுவும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 மற்றும் மே 1 முதல் 11 ஆம் தேதி காலகட்டத்தில். ஊடக ஆய்வகத்தின் பிரபாகரன் “மோடிக்கான நேரம் 50 சதவீதத்தை தாண்டிவிட்டது” என்கிறார். ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட இது 6 மடங்கும், கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டதை விட 10 மடங்கும் அதிகம்.
கெஜ்ரிவால் குறித்து வெளியான செய்திகளில் ஒரு பகுதி எதிர்மறையானவை. மோடி குறித்த செய்திகள் அப்படியில்லை.
இந்திய ஊடகங்கள் இப்போது பங்கெடுத்ததைப் போல, இந்தியத் தேர்தலில் இதற்கு முன்னர் பங்கெடுத்ததில்லை. எத்தனை தொலைதூர மாவட்டத்தில் இருந்தபடி, மோடி என்ன பேசினாலும், பல வாரங்கள் முக்கிய சானல்களில் அவை நேரலையாக ஓடிக் கொண்டிருந்தன.
இதுதான் கார்பரேட் ஊடகங்களின் முதல் முடிசூட்டுவிழா என்று சொல்ல முடியாது. அதன்அளவுதான் எதிர்பாராதது.

முழுமையாக வாசிக்க : www.maattru.com

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels