குற்றப்பின்னணி உடையவர்களுக்கு சிறை: நரேந்திர மோடி எச்சரிக்கை (தலைப்பு தப்பு)

குற்றப்பின்னணி உடையவர்களுக்கு சிறை: நரேந்திர மோடி எச்சரிக்கை

உங்க மேல இருக்குற குற்றச்சாட்டுகளைப் பற்றிக்கூட அப்றம் பேசலாம். உங்க சகாவான அமித் சா பற்றியும் வேண்டாம். இப்போ சிறையில் இருக்கு உங்க அமைச்சரவை சகா, அதிகாரிகள் என எல்லாரையும் விட்டுடலாம். மனிதர்கள் மீது டையரைப் போட்டு எரித்து உயிருடன் துடிக்கத் துடிக்க சாகடித்த உங்க தொண்டர்களையும் விட்டுடலாம்.டு ரோட்டில் அமைச்சர் ஒருவரை கண்டந்துண்டமா வெட்டுனவங்க, சிசுவில் இருந்த் குழந்தையை எரித்தவர்கள் ... கொடூர கொலைகளை எல்லாத்தையும் விடுங்க.

உதாரணத்துக்கு உங்க கட்சியோட தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர எடுத்துக்குவோம். அவர் மேல 6 கொலை முயற்சி வழக்கு இருக்கு. கிரிமினல் வழக்குகள் 21 இருக்கு. இந்த தேர்தலில் மட்டும் பாஜக நிறுத்தியிருக்கும் மொத்த வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் மேல் கிரிமினல் வழக்குகள் இருக்கு. அதுல 17 சதவீதம் கடுமையான குற்றங்கள்.

செய்தி இப்படி இருந்திருக்கணும்

"குற்றப்பின்னணி உடையவர்களுக்கு சிறை: நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை"

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels