அதிமுகவுக்குள் தீண்டாமைக் கொடுமை?!!!

சாதி பார்த்து புறக்கணிக்கப்படுவதாக, ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏ புலம்ப நேர்ந்திருக்கிறது. அவரை தற்போது கட்சியில் இருந்து விடுவித்திருக்கிறார்கள்.

முதல் நாள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன் - மைக்கின் முன் எம்.எல்.ஏ நிற்கிறார், அவருடன் கடுமையான முகத்தைக் காட்டியபடி அதிகாரி வாக்குவாதம் செய்கிறார். பிரச்சனை, 'அதிகாரிகள் அரசு விழாக்கள் குறித்து முறைப்படி தகவல் கொடுப்பதில்லை. பத்திரிக்கைகளில் பெயர் போடுவதில்லை' என்பது.

அடுத்த நாள் பத்திரிக்கை செய்தி வருகிறது. அதில் அமைச்சர் எம்.எல்.ஏவை மேடையிலேயே கடிந்துகொண்டதாக இருந்தது.

பொதுவாக, கொடநாடு செல்லும் வழியில் எப்போதும் நிரைந்திருக்கும் விளம்பர பலகைகளை கவனித்திருக்கிறேன். அவற்றில் தனித் தொகுதி எம்.எல்.ஏக்கள் பெயர் பாரபட்சத்திற்கு ஆளானதில்லை.

இந்த சூழலில் ஒரு எம்.எல்.ஏ தான் சாதியால் ஒதுக்கப்படுவதாகவும், தள்ளிவைக்கப்படுவதாகவும் உணர்வதும் - அதை வெளியே சொல்லியிருப்பதும் அதிமுக கவனித்து சரி செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சனை.

ஆனால், இப்படியொருத்தர் பொதுவில் பேசியதால் அவரே தண்டிக்கப்பட நேர்வது ஆரோக்கியமானதா? ஏன் நிதானித்து, உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கைக்கு போயிருக்கக் கூடாது?

எம்.எல்.ஏ குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின். அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மட்டுமல்ல.

2 comments:

  1. அண்ணே ஒரு சின்ன திருத்தம். அவரை கட்சியிலிருந்து விடுவிக்கவில்லை, கட்சி பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்போதும் அவர் அதிமுக எம்.எல்.ஏ தான்.

    ReplyDelete

Labels